3 ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
8 Oct 2026, 2:56 am

3 ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

திருப்பூர், அக்.7-பல்வேறு கோரிக்கைகளை வலியுளாட்சி ஊழியர்கள் புதனன்று 3 ஆவது நாளாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டப்படி ஊதியம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் துவங்கிய காலவரையற்றவேலை நிறுத்தம், திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்றது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி, பல்லடம், அவிநாசி, திருமுருகன் பூண்டி, உடுமலை, காங்கேயம், வெள்ளகோவில் ஆகிய ஆறு நகராட்சிகளிலும் புதனன்று 3 ஆவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. பல்வேறு கெடுபிடிகள், மிரட்டல் நடவடிக்கைக்கு இடையே இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், மாநில நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் சிஐடியு சங்க பிரதிநிதிகளுடன் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், அவுட்சோர் செய்யும் முறையை கட்டுப்பாட்டுஒழுங்குபடுத்துவது, இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் மற்றும் காலை நேரஉணவுப்படி ஆகிய பிரச்சனைகளில் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர்தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார். அதனடிப்படையில், இந்த வேலை நிறுத்தத்தை புதனன்று மாலையுடன் நிறைவு செய்வது என்று தீர்மானித்திருப்பதாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார். மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் வியாழனன்று (இன்று) பணிக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.