தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு

10 May 2026, 12:36 am
வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர், மே. 9 - திருப்பூர் மாவட்டத்தில் வெறி நாய்களால் கடித்து உயிரிழந்த கால் நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் விவசா யம் பல்வேறு பகுதிகளில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பலரும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடை களையும் வளர்த்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக விவ சாயிகள் வளர்க்கும் கால்நடை களை வெறிநாய்கள் கடிக்கின்றன.

மேலும், பட்டியில் நுழையும் வெறி நாய்கள் கடித்து குதறுவதில் 5 முதல் 10 ஆடுகள் வரை உயிரிழக்கின் றன.

இதனால் விவசாயிகள் பாதிக் கப்பட்டு வருகிறார்கள்.

வெறிநாய் கள் கடித்து உயிரிழக்கும் கால்நடை களுக்கு அரசு சார்பில் உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என விவசாயி கள் போராட்டங்கள் நடத்தினர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத் தால் வெறிநாய்கள் கடித்து உயிரி ழந்த கால்நடைகளுக்கு முதற்கட்ட மாக இழப்பீடு வழங்கப்பட்டது.

2 ஆவது கட்டமாக விரைவாக இழப் பீடு வழங்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து கால்நடை பரா மரிப்புத்துறை அதிகாரிகள் கூறு கையில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம், மடத்துக்கு ளம், உடுமலை, பல்லடம், அவி னாசி மற்றும் ஊத்துக்குளி உள் ளிட்ட பகுதிகளில், தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைக ளுக்கு முதற்கட்டமாக கால்நடை களை இழந்த விவசாயிகளுக்கு ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 500 இழப்பீடாக வழங்கப்பட்டது.

மேலும், 2 ஆம் கட்டமாக தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால் நடைகளுக்கு இழப்பீடாக ரூ.38 லட்சத்து 32 ஆயிரத்து 200 ஒதுக்கப் பட்டுள்ளது.

தற்போது விவசாயிக ளின் வங்கி கணக்கு விவரம் சேகரிக் கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிந்ததும் உயிரிழந்த கால்நடைக ளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் விரைவில் நிவாரணம் வழங்கப்ப டும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.