தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் உள்ள நூலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரிக்கை

17 May 2026, 12:51 am
திருப்பூரில் உள்ள நூலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரிக்கை
<p><strong>திருப்பூரில் உள்ள நூலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரிக்கை</strong></p><p>திருப்பூர், மே 16 - திருப்பூரில் செயல்படும் மாவட்ட நூலகம் மற்றும் இதர கிளை நூலகங் களில் வாசகர்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை வசதி செய்து தர வேண் டும் என்று கோரி உள்ளனர். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் எதிரிலும், குமார் நகர் பகுதி யிலும் கிளை நூலகங்கள் செயல் பட்டு வருகின்றன. மாவட்ட நூலகம் பார்க் சாலையில் செயல்பட்டு வருகி றது. பேருந்து நிலையம் அருகில் உள்ள கிளை நூலகத்திலும், குமார் நகரில் அவிநாசி சாலையில் செயல்ப டும் கிளை நூலகத்திலும் வாசகர்கள், புத்தக ஆர்வலர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அதேபோல் பார்க் சாலையில் உள்ள மாவட்ட தலைமை நூலகத்தி லும் ஏராளமானோர் படிப்பதற்காக வருகின்றனர். பொதுவான வாசகர் கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றிற்கு தயாராகும் மாணவர்களும் இங்கு வருகின்ற னர். எனினும் இந்த நூலகங்களில் பொதுமக்கள் வாசகர்கள் பயன்படுத் துவதற்கு கழிப்பறை வசதி கிடை யாது. மாவட்ட தலைமை நூலகத்தில் தனி கழிப்பறை இருந்தாலும் கூட அது பூட்டி வைக்கப்பட்டிருக்கும். நூலக அலுவலரிடம் கேட்டு அதற் குரிய சாவியை பெற்றுத்தான் வாச கர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியும். எனினும் எப்போதும் மூடி இருக்கும் அந்த கழிப்பறைக்கு, அலு வலர்களிடம் சாவியை கேட்டு பெற்று செல்வதற்கு பலர் தயங்குவர். எனவே நகரின் முக்கிய போக்கு வரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் செயல்படும் மேற்கண்ட நூலகங்க ளுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் அவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை உள் ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடமும், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடமும் நூலகங்களில் கழிப்பறை கட்டித்தர ஏற்பாடு செய்யும்படி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது ஏற்கனவே ஆறு ஏழு மாதங்க ளுக்கு முன்பே இந்த கோரிக்கை குறித்து மனு அளித்து இருப்பதாக தெரிவித்தார். எம்பி தொகுதி நிதி யில் இருந்து நூலகங்களில் கழிப் பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படி கே.சுப்பராயன் எம்பி-யிடம் மனு அளித்ததாக தெரி வித்தார். மேலும் குமார் நகர் நூலகத்தில் புதிய கட்டுமானப் பணி, பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அலுவலர்களி டம் கேட்டபோது அரசு நிதி ஒதுக்கீட் டில் இந்தப் பணி நடைபெற்று வருகி றது. எனினும் கழிப்பறை வசதி ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்த தாகவும் அவர் கூறினார். எனவே உடனடியாக மாவட்ட நிர் வாகம் கவனம் செலுத்தி நூலகங்க ளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரு வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசகர்கள் சார் பாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கேட்டுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.