வழக்கறிஞர்களுக்கு அபராதம் விதிப்பை கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு
5 Jun 2026, 10:04 pm
<p>திருப்பூர், ஜூன் 5- மதுரையில் வழக்கறிஞர்க ளுக்கு அபராத தண்டனை விதித்த நீதிபதியின் செயலை கண்டித்து திருப்பூரில் நீதிமன் றப் புறக்கணிப்பு போராட்டத் தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்ட னர். அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக காவல் துறை தனது கட்சிக்காரரை சிறையில் அடைக்க முற்பட்டுள்ளது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கச் சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் மீது காரணம் கேட்கும் அறிவிப்பு வழங்கி, தங்கள் தரப்பு நியாயத்தைக் கூட முழுமை யாக கேட்காமல், மதுரை எண் 5 குற்றவியல் நீதிமன்றம் அபராத தண்டனை விதித்தது. இது நீதிமன்றம், வழக்கறிஞர்கள் சங்கங்க ளுக்கு இடையிலான ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே மதுரை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது விதித்திருக்கும் அபராதத் தண்டனையை உடனடியாக நீதிமன்றம் கைவிட வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஒற்றுமையை பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும். மதுரை வழக்கறிஞர் கள் சங்க நிர்வாகிகள் மீது அபராத தண்டனை விதித்திருக்கும் மதுரை 5ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. வழக்கறிஞருக்கு அபராதம் தண்டனை விதித்த பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழக்கறிஞர்கள் வெள் ளியன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதி மன்றப் பணியை புறக்கணித்தனர். திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறி ஞர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஒ.உதய சூரியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், தேசியக்குழு உறுப்பினர் எஸ். பொன்ராம், வழக்கறிஞர் கனகசபை ஆகி யோர் உரையாற்றினர். வழக்கறிஞர் செல்ல பாண்டியன் நன்றி தெரிவித்தார்.</p>
