ஒப்பந்த இடத்தை கிரையம் செய்து தராமல் மோசடி எஸ்பி.,யிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார்
9 hours before

ஒப்பந்த இடத்தை கிரையம் செய்து தராமல் மோசடி

எஸ்பி.,யிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார்

திருப்பூர், அக்.28 -திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் செந்தில் நகர் குடியிருப்புவாசிகளுக்கு ஒப்பந்தப்படி வீட்டுமனைகளை கிரையம் செய்து தராமல் மோசடி செய்துவரும் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர மூன்றாவது மண்டலச் செயலாளர் த.ஜெயபால் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மண்டலக் குழு உறுப்பினர்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை புதனன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில் தெரிவித்திருப்பதாவது, திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், செந்தில் நகர் கட்டம்-VI பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு செந்தில் நகர் ப்ரோமோட்டர்ஸ் பி.பாலகிருஷ்ணன் என்பவர், குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களை நாடியுள்ளார். அதன்படி, பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம் மூலம் முன்பணம் பெறப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மக்கள் குடியேறினர்.

பெரும்பாலானோர் தவணைத் தொகையை செலுத்திவிட்டனர்; சிலர் முழுத் தொகையும் செலுத்திவிட்டனர். இந்நிலையில், ஆரம்பத்தில் ரூ.6.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரையத் தொகைக்கு மாறாக, தற்போது ஒரு சென்ட்டுக்குக் கூடுதலாக ரூ.3 லட்சமும், கிரையச் செலவுக்கு ரூ.2 லட்சமும் கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும், பணம் தரவில்லை என்றால் வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற முடியாமலும், நீதிமன்றம் மூலம் போராடி மின் இணைப்பு பெறும்அவல நிலையிலும் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றபோது சிலருக்கு மட்டும் கிரையம் செய்து கொடுத்துவிட்டு, ரூ.5 லட்சம் அடமானக் கடன் பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த நில மோசடியை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஒப்பந்தம் செய்து கொடுத்த விலையிலேயே ஏழை மக்களுக்கு வீட்டுமனைகளை கிரையம் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிகழ்வின்போது மண்டலக் குழு உறுப்பினர்கள் எம்.மகேஷ்,செ.ஜானகி மற்றும் 30-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் உடனிருந்தனர்.