முந்தய பக்கம்

கொடி காத்த தியாகி குமரன் பிறந்தநாள் விழா

3 hours before
கொடி காத்த தியாகி குமரன் பிறந்தநாள் விழா

கொடி காத்த தியாகி குமரன் பிறந்தநாள் விழா

ஈரோடு, அக்.4-சுதந்திரப் போராட்ட வீரர், கொடிகாத்த தியாகி குமரனின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று, சிவகிரியில் அமைந்துள்ள தியாகி குமரன் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி-மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரணதிவேல், திராவிட கழகத்தின் சண்முகம், சுதந்திர போராட்ட தியாகி குமரன் பேரவை சார்பில் செயல் தலைவர் துரைசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர் எம்.சசி, கிளைச் செயலாளர் பெருமாள், சிபிஐ நகரச் செயலாளர் வேல்முருகன், திராவிடர் கழக ஒன்றியச் செயலாளர் திராவிடமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூரிலுள்ள குமரன் நினைவு மண்டபத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, மாலை அணிவித்து மலர்தூவிமரியாதை செய்தார். வருவாய் கோட்டாட்சியர் த.சிவபிரகாஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார் மற்றும் தியாகி குமரன் வாரிசுதாரர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram