முந்தய பக்கம்

சந்தை புறம்போக்கு வகை நிலத்தை நத்தம் புறம்போக்காக மாற்றக் கோரிக்கை

19 Jun 2026, 12:16 am
சந்தை புறம்போக்கு வகை நிலத்தை நத்தம் புறம்போக்காக மாற்றக் கோரிக்கை
<p><strong>சந்தை புறம்போக்கு வகை நிலத்தை நத்தம் புறம்போக்காக மாற்றக் கோரிக்கை</strong></p><p>திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் துணை ஆணையர் (கலால்) கலந்து கொண்டார். இந்த முகாமில் திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பெரிச்சல் வருவாய் கிராமத்திற்குட் பட்ட வாவிபாளையம் க.ச.எண் 261இல் 40 ஆண்டு களாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு 2010ல் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியை சந்தை புறம்போக்கு என்ற வகை இனத்திலிருந்து நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்யாமல் உள்ளது. எனவே சந்தை புறம்போக்கு என்று உள் ளதை நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்திட வேண்டும் என்று கேட்டு அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். அதேபோல நெருப்பெரிச்சல் கிராமம் பாரதி நகர் க.ச. எண் 608 பகுதியில் 22 ஆண்டுகளாக வீடு கட்டு குடியிருந்து வரும் 18 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆ.சிகா மணி மற்றும் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ். முத்துசாமி ஆகியோர் பொது மக்களுடன் முகாம் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram