தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

26 May 2026, 11:35 pm
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 26- திருப்பூர் மாவட்ட அரசுப்பள்ளி களில் 11ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நடைபெறும் குளறு படிகள் மற்றும் மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத் தியுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரிடம், இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ச.மணிகண்டன் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: மாவட்டம் முழுவதும் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகின்றன.

இந்நிலை யில், பல்வேறு காரணங்களை கூறி மாணவர்கள் சேர்க்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்ற தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

குறிப்பாக, மாநகராட்சி பள்ளிகள் அதேபோல பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், காங்கேயம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளி உள் ளிட்ட பல அரசு பள்ளிகளில், “குறை வான மதிப்பெண்”, “இட வசதி இல்லை”, “குழுக்கள் நிரம்பிவிட் டது” போன்ற காரணங்களை கூறி மாணவர் சேர்க்கை மறுக்கப்படுவ தாக பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் கல்வி கற்க வரும் எந்த குழந்தையும் திருப்பி அனுப்பப்படக்கூடாது என்பது அர சின் அடிப்படை கொள்கையாகும்.

குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், அருகிலுள்ள அரசு பள்ளிகளில் கூட சேர முடியாத நிலைக்கு தள்ளப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இது மாண வர்களின் கல்வி உரிமையை நேரடி யாக பாதிக்கும் செயலாகும். ஒரு மாணவர் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலும் அவருக்கு கல்வி மறுக்கப்பட முடியாது.

அரசு பள்ளி களின் நோக்கம் அனைத்து மாண வர்களுக்கும் கல்வியை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்க ளுக்கு மட்டும் அல்ல.

எனவே, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் எந்த மாணவரையும் கார ணமின்றி திருப்பி அனுப்பக்கூடாது; உடனடியாக மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர் தெளிவான சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாணவர் சேர்க்கை யில் முறைகேடு நடைபெறும் பள்ளி கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு கிறேன்.

இந்நிலை தொடரும் பட்சத் தில், கல்வி உரிமைக்காக பொது மக்கள் மற்றும் மாணவர்களை ஒன் றிணைத்து சம்பந்தப்பட்ட பள்ளி கள் முன்பு ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.