தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவர்கள் அலட்சியம்: ஆபத்தான நிலையில் பச்சிளம் குழந்தை

21 Jun 2026, 2:25 am
மருத்துவர்கள் அலட்சியம்: ஆபத்தான நிலையில் பச்சிளம் குழந்தை
<p><strong>மருத்துவர்கள் அலட்சியம்: ஆபத்தான நிலையில் பச்சிளம் குழந்தை</strong></p><p>அமைச்சரிடம் புகார் திருப்பூர், ஜூன் 20- திருப்பூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை மருத்துவர் களின் அலட்சியம் மற்றும் அலைக் கழிப்பு காரணமாக, பச்சிளம் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச் சரிடம் குடும்பத்தினர் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனை யில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் சனியன்று ஆய்வு மேற்கொண் டார். அப்போது, திருப்பூர் நெசவா ளர் காலனியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் அமைச்சரை சந்தித்து மனு அளித்தார். அதில், எனது மகளுக்கு ஏற்கனவே சிசேரியன் மூலம் முதல் குழந்தை பிறந்ததால், இரண்டாவது பிரசவத்தையும் முன் கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் செய்ய வேண்டும் என மருத்து வர்கள் கூறியிருந்தனர். ஆனால், அதன்பின் பரிசோதனைக்கு சென்றபோது, உடனே பிரசவம் பார்க்காமல் செவ்வாய், புதன், வெள்ளி எனப் பல நாட்கள் கூறி மருத்துவர்கள் அலைக்கழித்துள் ளனர். இதற்கிடையே, மகளுக்கு கடு மையான பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந் தோம். அப்போது, குழந்தை வயிற் றிலேயே மலம் கழித்து, அதை சுவாசித்ததால் தற்போது உயி ருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. குழந் தையின் நிலை குறித்து மருத்து வர்கள் முழுமையான தகவல் தரா மல் மறைக்கின்றனர் என வேதனை யுடன் குறிப்பிட்டுள்ளார். இப்பு காரை பெற்றுக் கொண்ட அமைச் சர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.