தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உயிர் காக்கும் மருந்துகளை தடையின்றி வழங்க கோரிக்கை!

8 Jun 2026, 11:05 pm
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உயிர் காக்கும் மருந்துகளை தடையின்றி வழங்க கோரிக்கை!
<p><strong>திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உயிர் காக்கும் மருந்துகளை தடையின்றி வழங்க கோரிக்கை!</strong></p><p>திருப்பூர், ஜூன் 8 - ரத்த உறைதல் குறைபாடு நோய்க்கான உயிர்க் காக்கும் மருந்து களை திருப்பூர் அரசு மருத்துவமனை யில் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தன் னார்வ அமைப்பினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டத்தில் ஹீமோபி லியா எனப்படும் ரத்த உரைதல் குறை பாட்டு நோய்க்கான உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கப்பெறாமல் நோயாளிகள் அவதி அடைவதாக வும், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 80 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 32 பேர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இவர்களுக்கு மருந்து இல்லாததால் கோவை சென்று மருந்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பை தொடர முடி யாமலும், பலர் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதியடைந்து வரு கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஃபேக்டர் எனப்படும் ஐந்து வகை யான மருந்துகளுக்கு கடும் தட்டுப் பாடு உள்ளது. ஹீமோபிலியா உள்ள அனைவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்காவிட்டால் கை, கால்கள் ஊனமாகும் அபாயம் மற்றும் உயி ருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என் பதால் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் அனைத்து விதமான உயிர் காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹீமோபிலியா சொசைட்டி திருப்பூர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.