நெருங்கும் தீபாவளி; இன்னும் வழங்கப்படாத போனஸ்!
3 Nov 2026, 12:07 am

நெருங்கும் தீபாவளி; இன்னும் வழங்கப்படாத போனஸ்!

சிஐடியு கண்டனம்

திருப்பூர், நவ.2-தீபாவளிக்கு இன்னும் சில நாட்களேஉள்ள நிலையில், தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை முன்பாக சிஐடியு கண்டனக்கூட்டம் நடைபெற்றது.போனஸ் வழங்கப்படாத நிலையில், தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு புது ஆடைகள் வாங்குவதிலும், ஊருக்கு செல்வதிலும்

பண்டிகையை ஒட்டி சிரமத்திற்குள்ளாகவேண்டியயுள்ளது. எனவே தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பனியன் தொழிலாளர் சங்க காங்கேயம் சாலை ஏரியா கமிட்டி சார்பில் ஞாயிறன்று கூட்டம் நடைபெற்றது. பனியன் சங்க மாவட்ட துணைச்செயலாளர். ஏ.செல்வன் தலைமை ஏற்றார். மாவட்டப் பொருளாளர் நாகராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.மணி, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் நிறைவுரையாற்றினார்.

இதில், பனியன் சங்க மாவட்டக்குழுஉறுப்பினர் துரைமுருகன், காங்கேயம்ரோடு ஏரியா கமிட்டி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, பனியன் சங்க முதலிபாளையம் கிளைச் செயலாளர் லிங்கேஸ்வரன் மற்றும் மூன்றாவது மண்டல கமிட்டி உறுப்பினர்கள் எம்.மகேஷ்,எஸ்.ஜானகி மற்றும் பனியன் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.