மூலப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் தத்தளிக்கும் திருப்பூர்! ஆட்சியாளர்கள் தலையிட அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு கோரிக்கை
29 Oct 2026, 9:38 pm

மூலப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் தத்தளிக்கும் திருப்பூர்! ஆட்சியாளர்கள் தலையிட அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு கோரிக்கை

திருப்பூர், அக். 29 –மூலப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடும் பாதிப்பைச்சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியாளர்கள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டுமென அனைத்துதொழில் முனைவோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.பின்னலாடைத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் பருத்தி நூல், பாலியஸ்டர், சாயமேற்றப் பயன்படும் ரசாயனங்கள் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 50 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதனால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் 90 சதவீதப் பங்களிப்பை வழங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்போது 50 சதவீத உற்பத்தித் திறனுடன் மட்டுமே இயங்குகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள்தொடர்ந்து தொழில் நடத்த முடியாமல் தத்தளித்து வருகின்றன. எனவே, ஒன்றிய - மாநில அரசுகள்இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று திருப்பூர் அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்புகோரிக்கை விடுத்துள்ளது.

இப்பிரச்சனையை ஆட்சியாளர் களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளிப்பது, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க முயற்சிப்பது, மூலப்பொருட் களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைஎடுக்கப்படாவிட்டால் தீபாவளிக்குப் பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்திருப்பூர் அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ஆர்.கே. ரெசிடென்ஸி விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி. முத்துரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், நூல் வர்த்தகர் சங்கம், சாயம் மற்றும் ரசாயன வியாபாரிகள் சங்கம், பவர்டேபிள் உரிமையாளர் கள் சங்கம், காஜா பட்டன் சங்கம், பாலிதீன்உற்பத்தியாளர் சங்கம், எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், கிரில் மற்றும் வெல்டிங் உரிமையாளர்கள் சங்கம்உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொழிற்சங்கங்கள் சார்பில் எல்பிஎப்,எச்எம்எஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழிலாளர் போனஸ் கோரிக்கை தொடர்பான பிரச்சனை நிலுவையில் இருப்பதால், தீபாவளிக்குப் பிறகுஏற்பாடு செய்யும் கூட்டங்களிலேயே பங்கேற்க முடியும் என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் கடிதம் அளித்தன.

ஒன்றுபட்டுப் போராட முடிவுகோவை சிறுதொழில் அமைப்பின் நிர்வாகி ஜெயபால் கூட்டத்தில் பங்கேற்றுப்பேசினார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தொழில்துறையின் நெருக்கடி நிலை குறித்துப் பேசினர். அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி னர். தமிழக அரசு தொழில்துறைக்கான கொள்கையை வகுக்க வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அரசுகள் தலையிட வேண்டும்: முத்துரத்தினம்நிறைவாக, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உரையாற்றினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு திருப்பூரின் தொழில் நிலை குறித்து முழுமையாகத் தெரியவில்லை. வளர்ச்சியடைந்த நகரமாக மட்டுமே திருப்பூரைப்பார்க்கின்றனர். இங்கு ஒரு சில பெருநிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், 90 சதவீதத் தொழில் நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங் களாகவே உள்ளன. அவற்றின் பிரச்சனைகளை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

ஏற்கெனவே தொழில்துறையில் நிலவிய பல்வேறு நெருக்கடிகளின் காரணமாகவே தமிழகத்தின் தொழில்நகரங்களில் தவெக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எனினும், புதிய அரசும் தொழில்துறையின்தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ளவில்லை. முதலமைச்சரைச் சந்திக்க முயற்சித்தால், சிறு, குறு மற்றும்நடுத்தரத் தொழில் துறையினரைச் சந்திக்க அனுமதி கிடைப்ப தில்லை. பெருநிறுவனங்களின் உரிமையாளர்கள் மட்டுமே முதல்வரைச் சந்திக்க முடிகிறது.

வரலாறு காணாத வகையில் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், திருப்பூரின் தொழில்துறையும் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத நிறுவனங்கள் இயங்கவில்லை. தற்போது செயல்பட்டு வரும் பல நிறுவனங்களும் நெருக்கடியில் உள்ளன.

எனவே, மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படும். முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கவும் முயற்சிப்போம். மாநில அரசு, ஒன்றிய அரசின் கவனத்துக்கு இப்பிரச்சனையைக் கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தீபாவளிக்குப் பிறகு ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். (ந.நி.)