தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் மீண்டும் தலை தூக்கும் குப்பை பிரச்சனை!

24 Jun 2026, 1:56 am
திருப்பூரில் மீண்டும் தலை தூக்கும் குப்பை பிரச்சனை!

திருப்பூரில் மீண்டும் தலை தூக்கும் குப்பை பிரச்சனை!

திருப்பூர், ஜூன் 23 - திருப்பூர் மாநகரில் உருவாகும் குப்பையை முறையாக அகற்றி மேலாண்மை செய்யாமல் ஆங்காங்கே மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றத்தையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் இப்பிரச்சனைக்கு எப்போது தீர்வு காண்பார்கள்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி, 45 ஆவது வார்டுக்குட்பட்ட கலை ஞர் பேருந்து நிலையம் எதிரில் தினசரி மார்க்கெட் வளாகம் அமைந்துள்ள வீதியில் தரம் பிரிக்கப்பட்ட குப்பை மூட்டை மூட்டையாக சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, நகர் நல மையம் ஆகியவை இருக்கும் இப்பகுதி யில் மாதக்கணக்கில் குப்பை அகற்றப்படாமல் தேக்கி வைக் கப்பட்டுள்ளது. இந்த குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன், அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அதேபோல், 23 ஆவது வார்டுக்குட்பட்ட பத்மா வதிபுரம் 2 மற்றும் 3 ஆவது வீதிகளை இணைக்கும் சந்தில் மாதக்கணக்கில் மலைபோல் குப்பை தேக்கி வைக்கப்பட்டுள் ளது. சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இங்கு குவித்து வைக்கப்பட்ட குப்பை பல வாரங்களாக அகற்றப்படவில்லை. கடந்த 10 தினங்களுக்கு முன்பு அங்கி ருந்த குப்பையை அகற்றினர். எனினும் மீண்டும் அதே இடத் தில் குப்பை கொட்டப்பட்டு மலை போல் தேங்கியுள்ளது.

ஏற்கனவே 29 ஆவது வார்டு பகுதியிலும் குப்பை தேங்கி யுள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல் குறிப்பிட்ட இடங்களில் குப்பை மலை தேங்கியுள்ளது. குடி யிருப்பு பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் தினந்தோறும் வீடுகளில் குப்பை சேகரிப்பதில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வீதிகளில் வந்து குப்பை சேகரிக்கின்றனர். இந்த குப்பையை இரண்டாம் நிலை சேகரிப்பு மையங்கள் என சொல்லி பல்வேறு பகுதிகளில் கொட்டி வைத்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இப்பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்படும் என அப்போ தைய மேயர் தினேஷ்குமார் கூறினார். கோவில் வழி, நெருப் பெரிச்சல், சுண்டமேடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை மேலாண்மை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மைக்கு திடக்கழிவு மேலாண்மை பூங்கா என்று நெருப்பெரிச்சல் பகுதியில் உரு வாக்கப்பட்டது. மாநகரில் உள்ள குப்பை உரமாக்கும் எம்சிசி மையங்களும் முழு அளவில் செயல்பாட்டுக்கு முடுக்கி விடப் பட்டன. இதுபோன்ற நடவடிக்கையால் குப்பை பிரச்சனை தீரும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது மீண்டும் நக ரெங்கும் குப்பை அகற்றப்படாமல் தேங்கியிருக்கும் பிரச் சனை உருவெடுத்துள்ளது. நகர மக்கள் இதனால் அதிருப்தி யில் உள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்தில் குப்பை கொட்ட இடம் இல்லை என்று சொல்லி ஆங்காங்கே தேக்கி வைத்து பின்னர் அவற்றை மேலாண்மை செய்வதற்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. எனினும் இப் பிரச்சினையில் முழு மையான தீர்வு எட்டப்படாமல் உள்ளது. எனவே மாநக ராட்சி நிர்வாகம் குப்பை மேலாண்மை பிரச்சனையில் விரைந்து செயல்பட்டு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.