கஞ்சா போதை ஆசாமிகளால் தாக்குதல் அதிகரிப்பு: தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
16 Jun 2026, 12:04 am
<p><strong>கஞ்சா போதை ஆசாமிகளால் தாக்குதல் அதிகரிப்பு: தடுத்து நிறுத்த வலியுறுத்தல்</strong></p><p>திருப்பூர், ஜூன் 15 - திருப்பூரில் கஞ்சா உள் ளிட்ட போதைப் பொருள் விற் பனை அதிகரித்துள்ளதால், அப்பாவிகள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் சம் பவங்களும் அதிகரித்துள் ளன. எனவே இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏஐடியுசி கோரி உள்ளது. திருப்பூரில் பரவலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்துகி றது. கஞ்சா போதையில் கடந்த வாரத் தில் நல்லாறு பாலம் அருகில் சுமார் இரவு 8:40 மணியளவில் இரண்டு வட மாநில தொழி லாளர்களை அருகாமையில் இருந்த புத ருக்குள் இழுத்துச் சென்று ரத்தக் காயம் ஏற்ப டுத்தி அவர்களிடம் இருந்த செல்போன், பணம் ஆகியவற்றை கஞ்சா ஆசாமிகள் பறித்துள்ளனர். காவல்துறையில் புகார் கொடுத்து இருவர் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ளனர். விசாரணையில் சம்பந்தப் பட்ட இருவரும் ஏற்கனவே பல வழக்குக ளில் சம்மந்தப்பட்டவர்கள் என்று தெரிகி றது. திருப்பூரில் இது போன்ற சம்பவங் கள் அதிகரித்து வருகிறது. அதேபோல் வழிப் பறி செய்து தொழிலாளர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. இது திருப்பூர் தொழிலுக்கும், தொழிலாளர் களுக்கும் நல்லதல்ல. அதேபோல் எஸ்வி காலனி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இர வில் இரண்டு பேர் உள்ளே புகுந்து அங்கே உள்ள பொருட்களை எல்லாம் அடித்து சேதப் படுத்தி இருப்பது தெரிய வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை இரவு நேர ரோந்துப் பணிகளை கூடுதலாக்க வேண்டும். புதர் மண்டி கிடக் கிற இடங்களை சுத்தப்படுத்த வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் கூடுதலாக வாழ்கிற பகுதியில் கருத்து மோதல் ஏற்படாமல் இருப் பதற்கான முறையில் சமூக பாதுகாப்பு நல்லி ணக்க குழுக்கள் அமைக்க வேண்டும். திருப் பூரில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறை இல்லை. காவல்துறையினர் எண்ணிக் கையை அதிகப்படுத்த வேண்டும். பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியுசி சங்கத் தின் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சிய ருக்கு மனு கொடுத்தனர். இந்த நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் ஆர்.செந்தில்குமார், பொருளாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட இரு வர் பங்கேற்றனர்.</p>
