தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் அடிப்படை உரிமையான தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்

11 Dec 2025, 5:47 pm
திருப்பூரில் அடிப்படை உரிமையான தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்

திருப்பூரில் அடிப்படை உரிமையான தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்

அமுதா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் ஆய்வில் தகவல்

திருப்பூரில் அடிப்படை உரிமையான குடிநீர் மட்டுமின்றி வீட்டு பயன்பாட்டிற்கான தண்ணீரை விலைக்கு வாங்கும் மக்கள்  அதற்காக தங்கள் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டிய கட்டாயத் தில் இருப்பதாக பள்ளி மாணவிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். குழந்தைகள் அறிவியல் மாநாடு 2025க்காக, திருப்பூர் அமுதா மெட்ரிகுலே ஷன் பள்ளி மாணவிகள் என்.தனிஷ்கா (8ஆம் வகுப்பு), ஆர்.பவித்ரா (7ஆம் வகுப்பு) ஆகி யோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆண்டு குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, நீடித்த பாதுகாப்பான குடிநீர் மேலாண்மை என்ற ஆய்வுத் தலைப்பு கொடுக்கப்பட்டி ருந்தது. இதில் எல்லோருக்கும் தண்ணீர் என்ற துணைத் தலைப்பில் அமுதா பள்ளி மாணவி கள், “தண்ணீர் தணிக்கையும், பொருளா தாரத் தாக்கமும்” என்ற தலைப்பில் ஆய்வு  செய்தனர். இவர்களுக்கு வழிகாட்டு ஆசிரி யராக ஜோதி விக்னேஸ்வரி பணியாற்றினார். இவர்கள் செய்த ஆய்வுக் கட்டுரை திண்டுக் கல்லில் நடந்த மாநில அளவிலான குழந்தை கள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனிஷ்காவின் தந்தை நாகேந்திரன் சிறிய அளவிலான பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் நித்யாவும் இந்த நிறுவனத் தில் உடன் வேலை செய்து வருகிறார். அதேபோல் பவித்ராவின் தந்தை ரவி பனி யன் வேஸ்ட் தொடர்பான தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது தாயார் ஆனந்தி. தங்கள் ஆய்வு குறித்து தனிஷ்கா, பவித்ரா இருவரும் புதனன்று கூறியதாவது: நாங்கள் தண்ணீர் தணிக்கையும், பொருளாதாரத் தாக்கமும் குறித்து திருப்பூர் மாநகரில் எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள 18, 19 மற்றும் 31ஆவது வார்டுகளில் கள ஆய்வு செய்தோம். பள்ளி நேரம் முடிந்து தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கள ஆய்வு செய்தோம். கடந்த செப்டம்பரில் வீடுக ளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து பேசி னோம். மொத்தம் 103 பேரிடம் ஆய்வு செய் தோம். இதில் பெரும்பாலானோர் வாடகை வீடு களில் குடியிருப்பவர்கள் தான். சொந்த வீடுகளில் இருப்போர் குறைவானவர்களே. இதில் சிறு குடும்பங்கள் நாளொன்றுக்கு 390 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் 420 லிட் டர் தண்ணீர் நுகர்கின்றனர். மாநகராட்சி குடி நீர், லாரி தண்ணீர், ஆர்.ஓ. குடிநீர், ஆழ்குழாய் தண்ணீர், கேன் குடிநீர் என தண்ணீர் பெறு வதில் பல்வேறு நிலைகள் உள்ளன. குறிப் பாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் 15 நாட்க ளுக்கு ஒரு முறைதான், அதுவும் போதியளவு கிடைப்பதில்லை. இதனால் மாநகராட்சி குடி நீர் ஆதாரத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்க முடியவில்லை. எனவே விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாய  நிலை உள்ளது. காம்பவுண்ட் வீடுகளில் வாட கைக்குக் குடியிருப்போர், துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட தங்கள் குடும்பத் தேவைக்கு லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி அதற்குரிய கட்டணத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது தவிர குடிப்பதற்கு பல வீடுகளில் ஆர்.ஓ. சுத்திகரிப்பு உபகரணத்தைப் பயன்ப டுத்துகின்றனர். கேன் வாட்டர் வாங்கிப் பயன் படுத்துவதும் அதிகளவு உள்ளது. இதற்கு  வாரத்திற்கு குறைந்தது 2 கேன்கள், அதிக பட்சம் 3 கேன்கள் என மாதம் சராசரியாக ரூ.250 செலவிட வேண்டியதுள்ளது. பொதுவாக தண் ணீருக்காக மாதம் குறைந்தது ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை செலவிட வேண்டிய  கட்டாயத்தில் உள்ளனர். இத்துடன் குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிவு, சரியாக மூடா மல் தண்ணீர் விரயமாவது அதிகளவில் உள் ளது. மாநகராட்சி மூலம் 90 சதவிகித வீடுகளுக்கு வழங்கும் குடிநீர் இணைப்புகளுக்கு அளவு மானி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பல வீடுகளில் அமைக்கப்பட்டிருந்தாலும் பெரும் பாலும் உபயோகம் இல்லாமல் உள்ளது என்று தெரிவித்தனர். தங்கள் ஆய்வின் மூலம், மக்களுக்குக் குடிநீர் என்பது அடிப்படைத் தேவையான அத்தியாவசியப் பொருளாக இருந்தாலும் அது அவர்களுக்கு சீராக, சுத்தமான முறை யில் போதியளவு கிடைப்பதில்லை. எனவே தங்கள் மொத்த தண்ணீர் தேவைக்கு காசு கொடுத்து வாங்குவது என்ற நிலையை சார்ந்துள்ளனர். குறிப்பாக குறைந்த வரு வாய் பிரிவு குடும்பங்களை பொறுத்தவரை தண்ணீருக்கு செலவிடுவது தவிர்க்க முடியாத ஒரு சுமையாக உள்ளது. தண்ணீர் அடிப்படை உரிமை என்பது போய் காசு கொடுத்து  வாங்கும் சரக்காக இருக்கிறது. அனைவருக்கும் குடிநீர் என்பது இன்னும் எட்டாத நிலையில் சமுதாயரீதியாக விழிப்பு ணர்வும், மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் கட்டமைப்பை மேம்படுத்துவது, தண்ணீர் பயன்பாட்டில் விரயத்தைத் தவிர்ப்பது ஆகி யவை அவசியமாகும் என ஆய்வு முடிவாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து கேட்டபோது, தன்ஷிகாவும், பவித்ரா வும் முக மலர்ச்சியுடன், இது தங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும், நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம், மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு போனபோது, பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரையும் சந்தித்து பேச முடிந் தது. இது போல் புதிய விசயங்களில் ஆய்வு  செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். திருப்பூரின் முக்கியமான சமூக பிரச்சனை யாக உள்ள மக்களுக்கு தண்ணீர், அதன் பொருளாதாரத் தாக்கம் பற்றிய இந்த ஆய்வை இன்னும் விரிவாக கொண்டுச் செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதாக அமுதா பள்ளி  முதல்வர் ராணி ராமமூர்த்தி கூறினார்.  (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.