தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கை

26 Jun 2026, 1:27 am
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கை
<p><strong>விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கை</strong></p><p>திருப்பூர், ஜூன் 25 – திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு கடுமை யான வாழ்வாதார பிரச்சினைக ளுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி யாக தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டக் குழு சார் பில் மாவட்ட ஆட்சித் தலைவரி டம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. திருப்பூரில் வியாழனன்று நடை பெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டப் பொருளா ளர் ஏ.பாலதண்டபாணி ஆகியோர் அளித்த மனுவில், கிராமப்புறங்க ளில் ஆடு, மாடுகளை தெரு நாய்கள் கடித்து கொல்வது அதிக ரித்து வருவதால் விவசாயிக ளுக்கு கடுமையான நஷ்டம் ஏற் படுகிறது. உள்ளாட்சி அமைப்பு கள் மூலம் தெருநாய்களை கட்டுப் படுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சந்தை மதிப் பில் முழு இழப்பீடு வழங்க வேண் டும். மாவட்டம் முழுவதற்கும் ஒரே ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் (1962) மட்டுமே உள்ளதால் அவசர காலங்களில் உதவ முடிவதில்லை. எனவே, ஒவ்வொரு தாலுகாவிற் கும் ஒரு ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். காலியாக உள்ள கால் நடை ஆய்வாளர், உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அவிநாசி-அத் திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து குளம், குட்டைகளை யும் உடனடியாக இத்திட்டத்துடன் இணைக்க வேண்டும். மேலும், தேர்தல் வாக்குறுதிப் படி 5 ஏக்கர் வரை உள்ள விவசாயி களுக்கு முழு பயிர்க்கடனையும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய விவசாயி களுக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும். நிலமற்ற, கால்நடை வளர்க்கும் பட்டியலின மக்களுக்கு கால்நடை பராமரிப்புக் கடன் களை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதால் பசும்பால் லிட்ட ருக்கு ரூ.45 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.60 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். வாடகை இடங்களில் இயங்கும் பால் கூட்டுறவுச் சங்கங் களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும். தட்கல் முறையில் கட் டணம் செலுத்திய விவசாயிக ளுக்கு எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். விவசாயிகளின் இந்த நியாய மான கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் தனி கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அம்மனுவில் வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.