அமெரிக்க – இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிப்பு
17 Jul 2026, 11:32 pm
<p><strong>அமெரிக்க – இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிப்பு</strong></p><p>திருப்பூர், ஜுலை 17- அமெரிக்க - இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து ஜூலை 22 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத் துவது என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்கள் முடிவு செய்துள் ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் திருப்பூர் மாவட்ட நிர் வாகிகள் ஆலோசனை கூட்டம் வியாழனன்று ஊத்துக்குளி அலு வலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், எஸ்.சின்னசாமி, ஆர்.குமார், ஜி.கே.கேசவன், எஸ்.கே. கொளந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி முழுமை யானதாக இல்லாததால் விவசாயி கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். முதல்வர் ச.ஜோசப்விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஜுலை 20 அன்று திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, அவி நாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் ஆகிய வட்டங் களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இரண்டு சங்கங்களின் கொடிகளுடன் பங்கேற்பது என் றும், இந்த கோரிக்கையில் உடன் பாடு உள்ள இதர சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நாட்டின் விவசாய உற் பத்திக்கும், விவசாய விளைபொரு ளுக்கும் விலை வீழ்ச்சி ஏற்பட வழிவகுக்கும், நாட்டின் இறை யாண்மையை அடகு வைக்கும், அமெரிக்க -இந்திய தாராள வர்த் தக ஒப்பந்தத்தை எதிர்த்தும், கைவிடக் கோரியும், அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ள மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டத்தில் ஜுலை 22-ந் தேதி யன்று கிராம அளவில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்து வது என முடிவெடுக்கப்பட்டுள் ளது.</p>
