வீடில்லாதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிடுக
2 Jun 2026, 10:13 pm

வீடில்லாதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிடுக

திருப்பூர், ஜூன் 2- வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் உடனடி யாக வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் தாராபுரம் வரு வாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கும் இயக்கத்தில் ஈடுபட்ட னர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் இயக்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாராபுரத்தில் செவ்வாயன்று நடை பெற்றது.

விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன், சிஐடியு நிர்வாகி என்.கனகராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக கோட்டாட்சிய ரிடம் அளித்த கோரிக்கை மனு வில், தாராபுரம் தாலுகாவில் நிலச் சீர்திருத்த நிலங்கள், பஞ்சமி நிலங் கள், பூமிதான நிலங்கள் என பல் லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள் உள்ளன.

இந்த நிலங்கள் ஆக் கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும், வசதி படைத்த செல்வந்தர்கள் வசம் உள்ளன.

எனவே ஆக்கிரமிப்பா ளர்களை வெளியேற்றி ஏற்கனவே பட்டா பெற்று இருக்கும் பட்டிய லின மக்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் இந்த நிலங்களை பகிர்ந்து வழங்க வேண்டும்.

அதே போல் குடியிருந்து வரக்கூடிய நிலங்களுக்கு தற்போது இருக்கக் கூடிய தடைகளை களைந்து அவர் களுக்கு பட்டா வழங்க வேண் டும்.

சடையபாளையம் ஊராட்சி மானூர்பாளையத்தில், 23 குடும் பங்கள் கடந்து 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

ஆனால் அந்த நிலம் பழனிச்சாமி மகன் முத்துராஜ் என்பவர் பெயரில் கண்டிசன் பட்டாவாக உள்ளது.

அப்படி யாரும் அங்கு இல்லை. எ

னவே அந்த கண்டிஷன் பட்டாவை ரத்து செய்து 23 விவசாயத் தொழி லாளர் குடும்பங்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

அதேபோல் நல்லாபாளையம் புதூர் கிராமத்தில் 14 குடும்பங்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டா பூஜ் ஜிய மதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதை மாற்றித் தர வேண்டும். தொப் பம்பட்டி ஊராட்சி வரப்பாளையம் கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் 14 குடும்பங்கள் பட்டா பெற்ற இடம் வண்டிப் பாதை என உள்ளதை வகை மாற்றம் செய்து தர வேண்டும்.

குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 25 பட்டியலின குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்.

சடையபாளையம் ஊராட்சி மானூர்பாளையம் அருகே பேட்டைக்காளிபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியி ருந்து வரும் 40 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

ஆலம் பாளையம் கிராமத்தில் வசித்து வரும் மக்களின் நிலங்கள் பூஜ்ஜி யம் மதிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிலத்தை, பூஜ்ஜிய மதிப்பு என்பதை மாற்றித்தர வேண்டும். ஊத்துப்பாளையத்தில் பூமிதான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட 35 ஏக் கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத் துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

இந் நிலத்திற்கு அருகாமையில் உள்ள ரஞ்சிதாபுரம் மக்கள் வீட்டுமனை பட்டா கோரி பல ஆண்டு காலமாக மனு அளித்து வருகின்றனர். எனவே இந்த மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.