தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

20 Jul 2026, 11:25 pm
இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
<p><strong>இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்</strong></p><p>திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் திருப்பூர் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்த னர். மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச்செயலா ளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப் பினர்கள் அளித்த மனுவில், திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வெகு அருகில் 200 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுபான கடை (எண்:1969) செயல்பட்டு வருகிறது. செட்டிபாளையம், அண்ணா நெசவாளர் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக ளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இந்த சுற்றுச் சாலையில் கே.ஜி.எஸ்.பள்ளி அமைந்துள்ளது. இங்கிருந்து 250 மீட்டர் தொலை வில் மேற்கண்ட டாஸ்மாக் கடை உள்ளது. பல தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு அறிவித்த அடிப்படையில், இந்த டாஸ்மாக் மதுபான கடையை (கடை எண்: 1969) உடனடியாக அகற்ற மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித் தனர். அதேபோல் அவிநாசி வட்டம் வஞ்சிபாளை யம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் இப்பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.முத்துசாமி தலை மையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவு வஞ்சிபாளையம் ஸ்ரீ வாரி கார்டன் பகுதிக்கு அரு கில் செல்லக்கூடிய கௌசிகா நதியில் சட்டத்திற்கு புறம்பாக சில சமூக விரோதிகள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்து விடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் சாயக் கழிவை கொட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.