திருப்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
3 Jul 2026, 1:30 am
<p><strong>திருப்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 2 - திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக் கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கவும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரை வுபடுத்தவும், சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அந்த வகையில், நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த கடைகளின் விளம்பரப் பலகைகள், தற்காலிக நிழற்கூரைகள், மற்றும் தள்ளுவண்டிகள் ஆகியவை மாநக ராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு, பறிமுதல் செய்யப் பட்டன. மேலும், சாக்கடை கால்வாய்களை மூடி ஆக் கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தளங்களும் இடித்துத் தள்ளப்பட்டன. சில பகுதிகளில் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகள் வைத் தால், கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளனர்.</p>
