மின் கணக்கீட்டு குளறுபடியால் இருமடங்கு கட்டணம்
11 Jun 2026, 11:12 pm

மின் கணக்கீட்டு குளறுபடியால் இருமடங்கு கட்டணம்

சிபிஎம் புகார் திருப்பூர், ஜூன் 11- 15.வேலம்பாளையம் பகுதி யில் கடந்த 3 மாத காலமாக மின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்யும் ஊழியர்கள் வராததால், மிக அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் வாரிய அலுவல கத்தில் புகார் கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அனுப்பர் பாளையம் உதவி செயற்பொறியா ளர் அலுவலகத்தில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒவ் வொரு வீட்டிலும், மின் பயன்பாட் டுக்கு என சில நூறு ருபாய்களில் செலுத்திய மின் கட்டணம், மின் பயன்பாட்டு கணக்கீடு செய்யாத தால், தற்போது சில ஆயிரங்களாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இது, தங் கள் வருவாயை மீறிய செலவின மாக உள்ளதாலும், திடீரென மொத் தமாக ஒரு பெரிய தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தா லும் பெரும்பாலான பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏற்கனவே பல மணி நேரம் மின்வெட்டு நிலவி வருகி றது

. அதனால், வேலை குறைந்து, வருவாயும் குறைந்துள்ள நிலை யில், மின்வாரியத்தின் இந்த தாக்கு தலால் பொதுமக்கள் மிகுந்த துன் பப்படுகின்றனர். எனவே, உயர் அதி காரிகள் உடனடியாக இப்பிரச்ச னையில் தலையிட்டு, மின் கணக் கீடு செய்யும் ஊழியர்கள் முறை யாக கணக்கீடு செய்வதற்கு உறுதி செய்ய வேண்டும்.

வேலம்பாளை யம் பகுதியில் உடனடியாக குறை தீர்ப்பு முகாம் நடத்தி, பொதுமக் களின் குறைகளைச் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15.வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், புதுக்காலனி கிளைச் செயலாளர் சி.சுப்பிரமணியம், மூத்த தோழர் அ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.