குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
19 Jun 2026, 12:18 am
<p><strong>குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை</strong></p><p>திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு மிஷின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகராட்சி துணை ஆணையரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகர தலைவர் செல்லமுத்து, மாநகரப் பொருளாளர் கல்கி மற்றும் கிளைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் புதனன்று மாநகராட்சி அலுவலகத்தில் துணை ஆணையரை சந்தித்து, மிஷின் வீதி பகுதியில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவை அளித்தனர். இங்குள்ள உப்பு தண்ணீர் மேல்நிலை தொட்டி கட்டிடம் சிதலமடைந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. அந்த கட்டிடத்தை மறுசீரமைக்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு ஆர்ஒ இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், நொய்யல் வீதி சந்திப்பில் உள்ள நியாய விலைக் கடை அசுத்தமான நிலையில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமமாக உள்ளது. அந்த இடத்தை தூய்மைப்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.</p>
