முந்தய பக்கம்

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மனு: அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை

23 Jul 2026, 11:50 pm
குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மனு:  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை
<p><strong>குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மனு: அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை</strong></p><p>திருப்பூர், ஜூலை 23 - செங்கப்பள்ளி ஊராட்சி ஆவரங்காடு புதூர் பகுதி குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்துக்குளி தாலுகா தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரி டம் கோரிக்கை மனு அளித்தனர். குறிப்பாக இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை ஆற்று குடிநீர் வழங்கப்படுகிறது. எனினும் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் குடிநீரினால் டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வா கத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் குடி நீர் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என புதனன்று மனு அளித்தனர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உடனடியாக கள ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதி அளித் தார். அவர் உறுதியளித்தபடியே உடனடியாக அலுவ லர்கள் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram