திருப்பூர் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
6 Apr 2026, 5:37 pm
<p><strong>திருப்பூர் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்</strong></p>
<p>திருப்பூர், ஏப். 6 – திருப்பூர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திங்களன்று தாக்கல் செய்த னர். இதன்படி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ந. தினேஷ் குமார் திங்களன்று தெற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம் பி அமித் யிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரு டன் திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன், திமுக தெற்கு நகரச் செயலாளர் டி கே டி மூ.நாக ராஜன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி, முஸ்லிம் லீக் மாவட்ட தலை வர் சையது முஸ்தபா ஆகியோர் உள்ள னர். அவிநாசி அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோகிலா மணி, தனது வேட்புமனுவை, அவிநாசி வட் டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில், திமுக தேர்தல் பொறுப்பா ளர் மருத்துவர் கோகுல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முத்துசாமி, காங்கிரஸ் வட் டாரத் தலைவர் சென்னியப்பன், விசிக மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி ஆகி யோர் உடனிருந்தனர். உடுமலை உடுமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.ஜெயக்குமார் திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடுமலை கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமாரிடம் மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் ஈஸ்வரசாமி, சிபிஎம் நகரச்செயலாளர் தண்டபானி, விசிக மாவட்ட செயலாளர் முரு கன் ஆகியோர் உடனிருந்தனர். பல்லடம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வ ராஜ் திங்களன்று பல்லடம் வட்டாட்சியர கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி களின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
