தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எட்டு தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்சம் பேர்

23 Feb 2026, 5:35 pm
திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எட்டு தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்சம் பேர்
<p><strong>திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எட்டு தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்சம் பேர்</strong></p> <p>திருப்பூர், பிப்.23 - திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டது. இதில் எட்டுசட்ட மன்றத் தொகுதிகளில் மொத்த வாக்கா ளர்கள் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் உள்ள னர். கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப் பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்த &nbsp;எண்ணிக்கையை விட இறுதி வாக்காளர் பட்டி யலில் 74 ஆயிரத்து 139 வாக்காளர்கள் கூடுத லாகி உள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய, மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட &nbsp;தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் நாரண வரே திங்களன்று காலை 11 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட &nbsp;எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் இடம் பெற் றுள்ள ஆண் வாக்காளர், பெண் வாக்காளர், &nbsp;மாற்றுப் பாலினத்தவர் என மொத்த வாக்கா ளர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை இதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 142 பேர், பெண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 593 பேர், மாற்றுப் பாலினத்தவர் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 743 வாக்காளர்கள் &nbsp;இடம் பெற்றுள்ளனர். காங்கேயம் சட்ட மன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 3 ஆயி ரத்து 784 பேர், பெண்கள் 1 லட்சத்து 12 ஆயி ரத்து 849 பேர், மாற்றுப் பாலினத்தவர் 13 பேர் &nbsp;என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 646 வாக்காளர்கள் உள்ளனர். அவிநாசி (தனி) &nbsp;தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயி ரத்து 841 பேர், பெண்கள் 1 லட்சத்து 30 ஆயி ரத்து 496 பேர் மாற்றுப் பாலினத்தவர் 9 பேர் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 346 &nbsp;பேர் உள்ளனர். &nbsp;திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதி யில் ஆண்கள் 1 லட்சத்து 52 ஆயிரத்து 351 பேர், &nbsp;பெண்கள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 662 பேர், &nbsp;மாற்றுப் பாலினத்தவர் 125 பேர் என மொத்தம் &nbsp;3 லட்சத்து 10 ஆயிரத்து 138 பேர் உள்ளனர். &nbsp;திருப்பூர் (தெற்கு) தொகுதியில் ஆண்கள் 94 &nbsp;ஆயிரத்து 579 பேர், பெண்கள் 99 ஆயிரத்து 11 &nbsp;பேர், மூன்றாம் பாலினத்தார் 24 பேர் என மொத் தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 614 பேர் உள்ளனர். &nbsp;பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் ஆண்கள் &nbsp;1 லட்சத்து 56 ஆயிரத்து 69 பேர், பெண்கள் 1 லட் சத்து 66 ஆயிரத்து 429 பேர், மாற்றுப் பாலினர் &nbsp;32 பேர் என மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து &nbsp;530 பேர் உள்ளனர். உடுமலைபேட்டை தொகு தியில் ஆண்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 103 &nbsp;பேர், பெண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 396 &nbsp;பேர், மாற்றுப் பாலினர் 25 பேர் என மொத்தம் &nbsp;2 லட்சத்து 28 ஆயிரத்து 524 பேர் உள்ளனர். &nbsp;மடத்துக்குளம் தொகுதியில் ஆண்கள் 1 லட் சத்து 2 ஆயிரத்து 309 பேர், பெண்கள் 1 லட் சத்து 10 ஆயிரத்து 417 பேர், மாற்றுப் பாலினர் &nbsp;16 பேர் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து &nbsp;742 பேர் உள்ளனர். 74 ஆயிரம் வாக்காளர்கள் அதிகம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டு தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட &nbsp;பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. இந்த எட்டு தொகுதிகளில் மொத்த ஆண்கள் 9 லட்சத்து 44 ஆயிரத்து 178 &nbsp;பேரும், பெண்கள் 10 லட்சத்து 10 ஆயிரத்து &nbsp;853 பேரும், மாற்றுப் பாலினர் 252 பேரும் என &nbsp;மொத்தம் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 வாக்கா ளர்கள் உள்ளனர். &nbsp;சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத் திற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக் காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்கள் 18 &nbsp;லட்சத்து 81 ஆயிரத்து 144 பேர் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக் காளர் பட்டியலில் 74 ஆயிரத்து 139 வாக்காளர் கள் அதிகரித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றிப்பதை நேரில் பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரி வித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.