முந்தய பக்கம்

நாற்று நடும் போராட்ட அறிவிப்பு: பணிகள் துவக்கம்!

29 Oct 2026, 12:46 am
நாற்று நடும் போராட்ட அறிவிப்பு: பணிகள் துவக்கம்!

நாற்று நடும் போராட்ட அறிவிப்பு: பணிகள் துவக்கம்!

திருப்பூர், அக்.28-திருப்பூர் - தாராபுரம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி மிக்க இடத்தில் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக கண்டு கொள்ளப்படாமல் இருந்தசாலை, மார்க்சிஸ்ட் கட்சியின் நாற்று நடும் போராட்ட அறிவிப்பின் காரண

மாக, உடனடியாக செப்பனிடும் பணி தொடங்கியது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 ஆவது மண்டல கமிட்டி சார்பில், திருப்பூர் தாராபுரம் சாலை எஸ்.ஆர்.டி பஸ் நிறுவனம் அருகில் குண்டும் குழியுமானசாலையை செப்பனிட வலியுறுத்தி நாற்றுநடும் போராட்ட அறிவிப்பு செய்து பிளக்ஸ் தட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு குடிநீர் குழாயை சரி செய்து சாலை பராமரிப்பு பணியை மேற்கொண்டது. இதனையறிந்து, சம்பவ இடத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்றாவது மண்டல கமிட்டி செயலாளர் டி.ஜெயபால், மாநகராட்சி அலுவலருடன் பணிகளை தரமுடன் செய்யகேட்டுக்கொண்டார். மேலும், மாநகராட்சி செப்பனிடும் பணியை தொடங்கியதால் நாற்று நடும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் கார்னர், அரசமர அரண்மனை புதூர், காங்கேயம் ரோடு ராஜீவ்நகர் சிக்னல், கோம்பை தோட்டம், பெட்ரோல் பங்க் முன்பு, காசிபாளையம் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் என பலஇடங்களில் பாதிப்பு உள்ளதை மாநகராட்சி அலுவலரிடம் தெரிவித்து அவற்றையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஜெயபால் கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram