பாதாளச் சாக்கடை, குடிநீர் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு: சிபிஎம் நான்கு மையங்களில் பிரச்சாரம்
13 Jul 2026, 10:29 pm
<p><strong>பாதாளச் சாக்கடை, குடிநீர் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு: சிபிஎம் நான்கு மையங்களில் பிரச்சாரம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 13 - திருப்பூர் மாநகரின் அடிப்படை பிரச்சனைகளை மையப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரப் பகுதியில் நான்கு மையங்களில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் மாநகரில் சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்து இருப்பதை உடனடியாக சீரமைக்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடி யாக அகற்றி, சுகாதாரத்தைப் பாது காக்க வேண்டும், தெரு விளக்கு களை பழுது நீக்கி மக்களின் பாது காப்பை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர். கணேசன், மாநகரக்குழு உறுப்பி னர் கே.நாகராஜ், கிளைச் செயலா ளர்கள் எஸ்.சின்னச்சாமி, எம்.தியாக ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். வ.உ.சி.நகரில் நடைபெற்ற பிரச் சாரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் வை.ஆனந்தன், கிளைச் செயலாளர் கள் பி.குமார், டி.சம்பத், தி. கிருத்திகைவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சரளைக்காட்டில் மாந கரச் செயலாளர் பா.சௌந்தரராசன், மாநகரக்குழு உறுப்பினர் பி.குமார், கிளைச் செயலாளர்கள் வி.பாலசுப் பிரமணியம், எஸ்.தங்கராஜ், கே.ஏ. பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். ரங்கநாதபுரம் கொடிக்கம்பம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் வளர்மதி, நந்நத கோபால், மனோகரன், கிளைச் செய லாளர் எம்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி யின் இந்த பிரச்சார இயக்கத்தை பொதுமக்கள் ஆர்வத்தோடு கவ னித்து தங்களை இனைத்துக் கொண்டனர்.</p>
