மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தல்
26 May 2026, 11:36 pm

மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தல்

திருப்பூர், மே 26- பல்லடம் சாலையில் அமைந்துள்ள தனியார் மன மகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பா.லட்சுமி, தெற்கு ஒன்றிய குழு உறுப்பி னர் ரவிச்சந்திரன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் திருப் பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், திருப்பூர் மாநகராட்சி, 53 ஆவது வார்டுக்குட் பட்ட வீரபாண்டி பிரிவு, வெங்கடேஸ்வரா நகர் தெற்கு பகுதி, பல்லடம் சாலையில் டால்பின் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூடம் செயல்பட்டு வருகி றது.

இதன் அருகில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் அதிகமாக உள்ளன.

தமிழக அரசு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் 717 மதுபான கடைகளை மூடுவ தற்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி டால்பின் மனமகிழ் மன்றம் என்ற மதுபானக்கூடத்தை மூடுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.