குழந்தைகள், இளைஞர்களை கொத்தடிமைகளாக நடத்திய தம்பதி கைது
10 Oct 2026, 3:07 am

குழந்தைகள், இளைஞர்களை கொத்தடிமைகளாக நடத்திய தம்பதி கைது

திருப்பூர், அக்.9-திருப்பூரில் உள்ள செக்கிங்சென்டரில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வேலை வாங்கியதுடன், போதிய உணவு, மாத ஊதியம் வழங்காமல் இளைஞர், இளம் பெண்களை வேலை வாங்கிய கொடூர செயலில் ஈடுபட்டதனியார் நிறுவன உரிமையாளர்களான கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் பவானி நகர் 5ஆவது வீதியில் பக்ஷி ராஜா தோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த தோட்டத்தில் இரண்டு அடுக்கு மாடி வீட்டில் அழகர் அயனிங், பேக்கிங் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த செக்கிங் சென்டரை சிவக்குமார் மற்றும் இவரது மனைவிசாந்தி இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு, இளைஞர், இளம் பெண்களுக்கு அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி புரோக்கர் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்துஅழைத்து வந்து சேர்த்துள்ளனர். தற்போது இங்கு 17 வயதுக்கு கீழ் இரண்டு சிறுவர் மற்றும் இரண்டு சிறுமியர்கள் பணியாற்றினர். அதேபோல் இளைஞர்கள், பெண்கள் 11 பேர் என மொத்தம் 14 பேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு போதிய உணவு வழங்காமலும், தரமில்லாத அரசியில் தயாரித்த சாதங்களை வழங்கி வந்ததாககூறப்படுகிறது. அத்துடன் மாத சம்பளத்தை கொடுக்காமலும் நிறுவனத்தில் வைத்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இங்கு பணியாற்றுபவர்கள் வெளியில் செல்லாமல்இருப்பதற்கு இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வியாழனன்று மதியம் நிறுவனத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் அப்பகுதி பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் காவல் துறையினருக்கும், குழந்தை தொழிலாளர் அமைப்பினருக்கும் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் குழந்தை தொழிலாளர் அமைப்பினர் நிறுவனத்தில் இருந்த மற்ற இளைஞர்கள்மற்றும் இளம் பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது உண்மை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நிறுவன உரிமையாளர்களான கணவன், மனைவி இருவரை கைது செய்து வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மீட்கப்பட்ட 14 பேரில்சிலரை, அவரவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மற்றவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.