பின்னலாடை நூல் விலை ரூ.15 குறைந்தது!
2 Oct 2026, 1:04 am

பின்னலாடை நூல் விலை ரூ.15 குறைந்தது!

திருப்பூர், அக்.1 -திருப்பூரில் அக்டோபர் மாதத்திற்கான பின்னல் ஆடை தயாரிப்புக்கு உரிய பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்துள்ளது. பஞ்சு விலை இறங்கியதால் நூல் விலை குறைந்துள்ளதாக நூற்பாலைகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்தஆடைகளில் 68 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆயத்த ஆடைஉற்பத்தியில் முக்கியப் பங்காற்றுவது துணி நூல் ஆகும்.

பருத்தி விலையை பொறுத்து நூல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த மே மாதம் ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக பருத்தி இறக்குமதி அதிகரிக்க கூடும் என்பதால், நூல் விலை குறையும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால்அதற்கு நேர் மாறாக மாதம் தோறும்நூல் விலை ரூ.7 முதல் 10 வரை உயர்ந்த வண்ணமே இருந்தது.

குறிப்பாக நடப்பாண்டு துவக்கத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 82 ரூபாய் வரை நூல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்புமாதத்திற்கான நூல் விலையில் 15 ரூபாய் விலை குறைந்து நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பஞ்சு கேண்டி விலை 73 ஆயிரம் ரூபாய் இருந்த நிலையில் தற்பொழுது, 65 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளதால் நூல் விளையும் 15 ரூபாய் குறைந்துள்ளதாக நூற்பாலைகள் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நூல் விலை தற்பொழுது ரூ.15 குறைந்துள்ளது பின்னலாடை தொழில்துறையினர் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வரும் மாதங்களிலும் நூல் விலை குறையவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நடப்பு மாதத்திற்கான நூல் விலை, 10 ஆம் நம்பர்கோம்டு நூல் கிலோ ரூ.250, 16 ஆம் நம்பர் ரூ.259, 20 ஆம்நம்பர் கோம்டு நூல் ரூ.318, 24 ஆம் நம்பர் ரூ.330,30 ஆம் நம்பர் ரூ.340, 34 ஆம் நம்பர்ரூ.360, 40 ஆம் நம்பர் ரூ.378, 20 ஆம்நம்பர் செமி கோம்டு ரூ.315, 24 ஆம் நம்பர் ரூ.323, 30 ஆம் நம்பர் ரூ.326,34 ஆம் நம்பர் ரூ.349, 40 ஆம் நம்பர்ரூ.368-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.