தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பின்னலாடை பருத்தி நூல் கிலோவுக்கு ரூ.7 உயர்வு

16 Jul 2026, 10:09 pm
பின்னலாடை பருத்தி நூல் கிலோவுக்கு ரூ.7 உயர்வு

பின்னலாடை பருத்தி நூல் கிலோவுக்கு ரூ.7 உயர்வு

அதிர்ச்சியில் திருப்பூர் உற்பத்தியாளர்கள்!

திருப்பூர், ஜூலை 16 – திருப்பூர் பின்னலாடை தொழிலின் பிரதான மூலப்பொருளான பருத்தி நூல் விலை, நடப்பு ஜூலை மாதத்தில் கிலோவுக்கு 7 ரூபாய் உயர்த்தப்படுவ தாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இந்த திடீர் விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூல் விலை உயர்வு குறித்து நூற் பாலை சங்கத்தினர் கூறுகையில், இந்திய பருத்தி கழகம் மீண்டும் பஞ்சு விலையை உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் கேண்டிக்கு 1,500 ரூபாய் அதிகரித்து, ஒரு கேண்டி பஞ்சு விலை மீண்டும் 70 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. இந்த பஞ்சு விலை உயர்வு காரணமாகவே நூல் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, உள்நாட்டு பருத்தி விலை கேண்டிக்கு ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை உயர்ந்ததால், கடந்த பிப்ர வரி முதல் மே மாதம் வரை நூல் விலை கிலோவுக்கு ரூ.61 வரை உயர்ந்தது. இதையடுத்து, பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டதால் நூல் விலை குறையும் என உற்பத்தி யாளர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் கிலோ வுக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால், ஜூன் 23 அன்று திடீரென ரூ.5 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஜூலை 1-ஆம் தேதி நூல் விலை யில் மாற்றமில்லாத நிலையில், தற் போது 16-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற் பாலைகள் புதிய அறிவிப்பை வெளி யிட்டுள்ளன. இதன்படி நடப்பு மாதத்திற்கான நூல் விலை, 10-ம் நம்பர் கோம்டு நூல் கிலோ ரூ.236, 16-ம் நம்பர் ரூ.245, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.304, 24-ம் நம்பர் ரூ.316, 30-ம் நம்பர் ரூ.326, 34-ம் நம்பர் ரூ.346, 40-ம் நம்பர் ரூ.364, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.301, 24-ம் நம்பர் ரூ. 309, 30-ம் நம்பர் ரூ.312, 34-ம் நம்பர் ரூ. 335, 40-ம் நம்பர் ரூ.354-க்கும் விற்பனை செய் யப்படுவதாக தெரிவித்தனர். வரி ரத்தால் விலை குறையும் என்று ஆவலுடன் காத்திருந்த பின்னலாடை தொழில் துறையினருக்கு, இந்த தற் போதைய விலை உயர்வு கூடுதல் உற் பத்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.