தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 Jun 2026, 11:35 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது

திருப்பூர், ஜூன் 1 - பின்னலாடை ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பருத்தி நூல் விலை ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கிலோ வுக்கு ரூ.10 குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மாதம் தோறும் இரண்டு முறை நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 முதல் 10 வரை உயர்ந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மே மாதம் 16ம் தேதி வரை ரூ. 61 வரை நூல் விலை உயர்த்தப் பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக பருத்தி இறக்குமதி அதிகரிக்க கூடும் என்பதால், நூல் விலை குறையும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் ஜூன் 1ஆம் தேதி திங்கள் கிழமை அறிவித்தன. அதன்படி ஜூன் மாதத்தில் ரூ.10 விலை குறைக்கப்பட்டுள்ளது. பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்ட தன் காரணமாக நடப்பு மாதத்தில் விலை குறைந்துள்ளது என கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் நூல் விலை குறை வதற்கான வாய்ப்புள்ளதாகவும், ஏற்றுமதியாளர்கள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி கொள்முதல் செய்யக் கோரிக்கை

நூல் மற்றும் பருத்தி வியாபாரிகள் கூறுகையில், நூல் விலையை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசும் பருத்தியை நேரடி கொள்முதல் செய்து நூற்பாலை களுக்கு வழங்கும்பட்சத்தில் விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும். அதே நேரத்தில் நூல் விலையும் சீராக கட்டுக் குள் வைக்க முடியும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்களும் ஆடை விலை நிர்ணயத்தை சீராக வைக்க முடியும். இதனால் மேலும் ஏற்றுமதி அதிகரித்து தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்று கூறினார்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:56.30/105 அடி நீர்வரத்து:139 கனஅடி நீர்திறப்பு:750 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:22.90/72 அடி நீர்வரத்து:40கனஅடி நீர்திறப்பு:920கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:27.55/160 அடி நீர்வரத்து:64.50கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:66.95/120அடி நீர்வரத்து:290கனஅடி நீர்திறப்பு:131கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:51.38/60அடி நீர்வரத்து:791கனஅடி நீர்திறப்பு:1137கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:32.58/90அடி நீர்வரத்து:219கனஅடி

ஜனநாயக விரோத நியமனம் கே.சுப்பராயன் எம்பி., சாடல்

திருப்பூர், ஜூன் 1 - திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் வார்டு ஒருங் கிணைப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்திருக் கும் மாநகராட்சி ஆணையாளரின் ஜனநாயக விரோத நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து கே.சுப்பராயன் ஞாயிறன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களால் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில், இத்தகைய நியமனங் களை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதாகும். எனவே உள்ளாட்சி ஜனநா யகத்தை சீர்குலைக்கும் வார்டு ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தெரி வித்துள்ளார்.

அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு எதிர்ப்பு கோத்தகிரி பணிமனை ஊழியர்கள் போராட்டம்

உதகை, ஜூன் 1- கோத்தகிரி அரசு போக்குவரத்துக் கழக பணி மனையை சார்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள், நிர்வாகத் தின் ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்து திங்க ளன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. கோத்தகிரி பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் இப்பணிமனை யில் பணிபுரிந்த ஓட்டுநர் ஒருவரை பொது மேலாளரும், கிளை மேலாளரும் ஒருதலைப்பட்சமாக தன்னிச்சையான காரணங்களுக்காக தாராபுரத்திற்குப் பணியிட மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் தாராபுரம் பகுதியில் நிகழ்ந்த விபத்தொன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். முறையற்ற இந்த தண்டனை இடமாற்றமே அந்த தொழிலாளியின் மரணத்திற்கு மறைமுகக் காரணம் என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். மறைந்த ஓட்டுநரின் குடும் பத்திற்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க வேண்டும்; தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை என்பதால் கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற் றும் பொதுமக்கள் தற்காலிக சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும், எங்களோடு உழைத்த சக தொழிலாளியின் உயி ருக்கு நீதி கிடைக்காமல், நாங்கள் எப்படி பேருந்துகளை இயக்க முடியும்? என ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் உரிய விளக் கம் அளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மின்தடை அறிவிப்பு

உடுமலை, ஜூன் 1- உடுமலை தாலூகா கிளுவன்காட்டூர் துணை மின் நிலை யத்தில் உட்பட்ட பகுதிகளில் மின் பாதைகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் 2 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்ப டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசன பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்பநாய்க் கனூர், ஆலாம்பாளையம்,சாமராயப்பட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம் பாளையம், சாரதிபுரம், மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதி யில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.