தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் ஜனநாயக விரோத செயல் ஆணையாளர் முடிவை ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

31 May 2026, 11:05 pm
வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் ஜனநாயக விரோத செயல் ஆணையாளர் முடிவை ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் ஜனநாயக விரோத செயல் ஆணையாளர் முடிவை ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>திருப்பூர், மே 31- திருப்பூர் மாநகராட்சி 60 வார்டு களில், வார்டு ஒருங்கிணைப்பா ளர்கள் நியமிப்பதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்திருப்பது தன்னிச்சையான, ஜனநாயக விரோத செயல். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாமன்றம் இருக்கக் கூடிய நிலையில், இந்த நிய மனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாநக ராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் கடந்த புதனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மாநகரில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியா வசியப் பணிகளை கண்காணித்து குறைகளை சரி செய்ய மாநகராட்சி யில் பணிபுரியும் சுகாதார ஆய்வா ளர்கள், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் ஒவ் வொரு வார்டுக்கும் தனித்தனியாக “வார்டு ஒருங்கிணைப்பாளர்கள்” ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் கள் தினமும் காலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை தங்களுக் கான வார்டு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு சுகாதாரம் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளில் ஏற்படும் குறைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள தாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள், வார்டு ஒருங் கிணைப்பாளர்களை எளிதில் அடையாளம் காண, வார்டு ஒருங் கிணைப்பாளர் (Ward coordinator) என்ற பெயருடன் தனி டீ-ஷர்ட்கள் வழங்கப்பட்டு அதனை அணிந்து பணியில் அவர் கள் ஈடுபட இருப்பதாக, ஆணையர் எம்.பி.அமித் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலை யில், ஒவ்வொரு வார்டுக்கும், வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நிய மிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக மாநகராட்சி யில் தற்போது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாமன்றம் பதவி யில் உள்ளது. மாநகராட்சி பணி களை மேம்படுத்துவதற்கு மாமன்ற கூட்டத்தை நடத்தி அதில் உரிய தீர் மானத்தை நிறைவேற்றி நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஜனநாயக ரீதியான மாமன்றத்தை புறக்கணித்து விட்டு, மாநகராட்சி ஆணையாளர் தன்னிச்சையாக இம்முடிவை எடுத் திருப்பது ஜனநாயக விரோத செயல். ஏற்கெனவே மாமன்ற உறுப்பி னர்கள் தங்கள் வார்டு கோரிக்கை கள் குறித்து மாநகராட்சி அதிகாரி கள், உதவி பொறியாளர்கள் உள் ளிட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசினால் அவர்கள் உரிய பதிலளிப்பதில்லை, பொறுப் புடன் செயல்படுவதில்லை, அலட் சியப்படுத்துகின்றனர் என்று மாநக ராட்சி மாமன்றக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற னர். இந்த குற்றச்சாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும் போதே, அரசு நிர்வாகத்தின் சார்பில் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் என தனி யாக நியமித்திருப்பது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி விட்டு, அதிகார வர்க்கத்தின் மூலம் வேறு யாரோ மறைமுகமாக அதிகா ரம் செலுத்த முயற்சிப்பதாகத் தெரி கிறது. இது அப்பட்டமான ஜனநா யக விரோத செயல். இத்தகைய நட வடிக்கையை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது. மக்களின் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, சாக்கடை சுத்தம் செய்வது, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளில் மாநக ராட்சி நிர்வாகம் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு, மாமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரிவிக்கப்படும் வார்டு பிரச்சினைகளுக்கு, மாநகராட்சி நிர் வாகம் விரைந்து நடவடிக்கை எடுப் பதே சரியான தீர்வாக இருக்கும். எனவே வார்டு ஒருங்கிணைப்பா ளர்கள் என 60 வார்டுகளுக்கும் தனியாக நிர்வாகத்தின் அலுவலர் கள், பணியாளர்களை நியமிக்கும் முடிவை திருப்பூர் மாநகராட்சி நிர் வாகம் உடனடியாக கைவிட வேண் டும். உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர் குலைக்கக் கூடாது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.