வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு
4 Jun 2026, 10:23 pm

திருப்பூர், ஜூன் 4-

திருப்பூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதே, சர்வாதி

காரமாக வார்டு நியமன உறுப்பினர்களை நியமித்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பதவியில்

இருக்கும் போதே, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் என்று அலுவலர்களை நியமித்துள்ள திருப்பூர் மாநக

ராட்சி ஆணையாளரின் நடவடிக்கையை கண்டித்தும், உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடாது என்

றும், நியமிக்கப்பட்டுள்ள வார்டு ஒருங்கிணைப்பாளர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மௌனிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இவ்வியக்கத்தில், சங்கத்தினர் மாவட்ட பொருளாளர் ஜி.சிந்தன், வடக்கு மாநக

ரச் செயலாளர் நவீன், மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளா

னோர் பங்கேற்றனர். இந்த நியமனத்தை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.