தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் 60 வார்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்க ஏற்பாடா?

29 May 2026, 11:10 pm
திருப்பூரில் 60 வார்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்க ஏற்பாடா?

திருப்பூரில் 60 வார்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்க ஏற்பாடா?

​​​​​​​திருப்பூர், மே 29– திருப்பூர் மாநகராட்சி, 60 வார்டு களிலும் பொது மக்களுக்கு வழங் கும் சேவைகளை தடையின்றி, விரைந்து வழங்க வார்டு ஒருங்கி ணைப்பாளர்கள் நியமிக்கப்படுவ தாக மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் கூறியிருக்கிறார்.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களை புறக் கணிக்கும் ஏற்பாடா? என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து புதனன்று மாநக ராட்சி ஆணையர் அமித் வெளியிட் டுள்ள அறிக்கையில், மாநகரில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவ சியப் பணிகளை நேரடியாக கண்கா ணித்து குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் மாநக ராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், உதவி பொறியா ளர்கள், தொழில்நுட்ப உதவி யாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனி யாக ”வார்டு ஒருங்கிணைப்பா ளர்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ள னர்.

இவர்கள் தினமும் காலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை தங்க ளுக்கான வார்டு பகுதிகளில் நேரடி யாக ஆய்வு மேற்கொண்டு சுகா தாரம் குடிநீர், தெரு விளக்கு உள் ளிட்ட பணிகளில் ஏற்படும் குறை களை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள் ளது.

பொதுமக்கள் மத்தியில் வார்டு ஒருங்கிணைப்பாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், வார்டு ஒருங்கிணைப்பாளர் (Ward coordinator) என்ற பெயருடன் தனிப்பட்ட டீ-ஷர்ட்கள் அடுத்த வாரம் முதல் வழங்கப்பட்டு அதனை அணிந்து பணிகளை நேர டியாக கண்காணிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட உள்ளதாகவும், மேலும் புகார் குறித்து தெரிவிக்க தொடர்பு எண்களையும் ஆணையர் எம்.பி.அமித் வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில் தேர்ந் தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பி னர்கள் இருக்கும் நிலையில் ஒவ் வொரு வார்டுக்கும் வார்டு ஒருங் கிணைப்பாளர்கள் அறிவிக்கப் பட்டு அனைத்து அடிப்படைப் பணி களையும் கண்காணிப்பார்கள் என்று ஆணையர் அறிவித்திருப் பது வியப்பளிப்பதாக உள்ளது.

ஏற்கெனவே மாமன்ற உறுப்பி னர்கள் தங்கள் வார்டு கோரிக்கை குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினால் அவர்கள் உரிய பதிலளிப்பதில்லை, பொறுப் புடன் செயல்படுவதில்லை என்று மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அடிக்கடி புகார் கூறப்பட்டு வருகி றது.

இந்நிலையில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக் கும் போதே, நிர்வாகத்தின் சார்பில் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் என நியமிப்பது சரியா? என்ற கேள்வி எழுகிறது.

அவர்கள் மக் கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி அதி காரம் செலுத்தக் கூடிய நிலை ஏற் படக் கூடும்.

எனினும் இது குறித்து சில மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்டபோது, கவுன்சிலர்கள் இருக்கும்போது அவர்களை நிய மித்தால், பிறகு நாங்கள் எதற்கு, எங்களுக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.