திருப்பூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்
26 Feb 2026, 5:09 pm

திருப்பூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்

திருப்பூர், பிப்.26- திருப்பூர் மாநகரில் குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் திடக்கழிவு மேலாண்மை பன்முக நடவடிக் கைகள் குறித்து 2026 - 27ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. வியாழக்கிழமை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வெளியி டப்பட்ட நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை மேயர் ந.தினேஷ்குமார் விளக்கி சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாற்றி னார். அவர் கூறிய முக்கிய அம்சங் கள் வருமாறு: திருப்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையம் அரு கில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளு டன் முதல்வர் படைப்பகக் கட்டி டம் கட்டப்பட்டு வருகிறது. நஞ் சப்பா பள்ளி வளாகத்தில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் யூபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன் மைத் தேர்வுக்கு தயாராகி வரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். சாலை, பாலப் பணிகள் மாநகரில் தற்போது 316.93 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.197.68 கோடி செலவில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மண் சாலைகளும் தார் சாலையாக மாற்றப்படும். நம்ம சாலை செயலி மூலம் மக்களிடம் இருந்து வரும் புகாரின் அடிப்ப டையில் சேதமடைந்த சாலைகள் உடனடியாக சரி செய்யப்படும். பி.என்.சாலையில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இணைப்புச் சாலைகள் அமைக் கப்பட்டு போக்குவரத்து நெருக் கடி குறைக்கப்படும். ஆண்டிபாளையம் திருப்பூர் குமரன் கல்லூரி, பவானி நகர் ஆகிய இரண்டு இடங்களில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள் அமைக் கப்படும். கல்லூரி சாலையை யும், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாலையை யும் இணைக்கும் வகையில் ஒரு ரயில்வே மேம்பாலம், 7 இடங்க ளில் ஆய்வு செய்யப்பட்டு புதி தாக ரயில்வே கீழ்பாலங்கள் ்அமைக்கப்படும். குடிநீர், வடிகால் வசதி மாநகரில் 12 இடங்களில் ரூ.38.88 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணி அமைக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்ப டும். 4ஆவது குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதல் குடிநீர் பெறப்ப டும்போது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலம் பெறப்படும் கூடுதல் குடிநீர் அளவு குறைக்கப்பட்டு கூடுதல் செலவினம் குறைக்கப்படும். 10 வார்டுகளில் 24 மணி நேர தடை யற்ற குடிநீர் விநியோகம் செய் யப்படும். வீடுகளில் ஸ்மார்ட் டிஜிட்டல் வாட்டர் மீட்டர்கள் பொருத்தப்படும். பாதாளச் சாக்கடை விடுபட்ட பகுதிகளுக்கும் வரும் ஆண்டுக ளில் படிப்படியாக நிறைவேற்றப் படும். கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி நீரை தொழிற்சாலைக ளுக்கு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும். சுகாதார நிலையங்கள் கேவிஆர்நகர், நல்லூர், குளத் துப்பாளையம் பகுதிகளில் கூடு தல் மருத்துவமனைக் கட்டிடங் கள் ரூ.3.60 கோடியில் கட்டப்படு கிறது. மேட்டுப்பாளையம் பகுதி யில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைக் கட்டிடம், ரூ.3 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் புதிய சுகாதா நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன. மொத்தம் 52 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங் கள் உருவாக்கப்பட்டு செயல் பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 8 வார்டுகளிலும் சுகாதார நிலை யங்கள் அமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை 28 நுண்ணுரமாக்கும் மையங் களில் ரூ.1.70 கோடி மதிப்பில் இயந்திரங்கள் புதுப்பிக்கப்பட் டுள்ளன. இங்கு ரூ.3.68 கோடி மதிப்பில் ஆண்டுக்கு உரிய இயக்குதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வீடுகளி லேயே 100 சதவீதம் குப்பையைத் தரம் பிரித்து வழங்கும் முறையை வலுப்படுத்த, அனைத்து குடியி ருப்புகளுக்கும் இரு வண்ண குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்பட் டுள்ளது. இடுவாய் கிராமத்தில் தற்கா லிக குப்பை சேகரிப்பு மையத் தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி முறைப்படி ரூ.3 கோடியே 65 லட் சத்து 71 ஆயிரம் செலவில் கட்ட மைப்பு வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. நிரந்தர செயலாக்க மையம் அமைக்கப்பட்டவுடன் இடுவாய் தற்காலிக மையம் பழைய நிலைக்கு கொண்டு வரப் படும். இதற்குரிய நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. மக்கும் கழிவு செய லாக்க மையங்களில் 120 டன் ஈரக் கழிவுகள் அறிவியல் முறையில் உரமாக்கப்பட்டு பூங்காக்களுக் கும், விவசாயிகளுக்கும் வழங் கப்படுகின்றன. பழைய கழிவுகளை மேலாண்மை செய்ய கோவில்வ ழியில் செயல்படும் ட்ரோமல் உடன், நெருப்பெரிச்சலில் ட்ரோ மல் இயந்திரம் நிறுவப்பட்டு கழிவு கள் தரம் பிரிக்கும் பணி முழுமை யடையும். நெருப்பெரிச்சல், கோயில்வழி, வேலம்பாளையம், சுண்டமேடு ஆகிய நான்கு மையங்களில் கட்டமைப்பு வசதி களுக்கு ரூ.3 கோடியே 4 லட்சம் செலவிடப்படும். ஈரக்கழிவுகளை மதிப்புக்கூட் டிய எரிபொருளாக மாற்ற 10 டன் உயிரி எரிவாயு ஆலை, 200 டன் உயிரி சிஎன்ஜி ஆலை திட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டு உள் ளன. திருப்பூர், கோவை, ஈரோடு மூன்று மாநகராட்சிகளும் இணைந்து நாளொன்றுக்கு 1200 டன் மக்கும் கழிவுகளை பயன்ப டுத்தி மின்சாரம் தயாரிக்கும் மெகா திட்டம் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனையு டன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.200 கோடி மதிப்பீட்டிலான இத் திட்டம் தமிழகத்தில் முதன்முறை யாக திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். மின்னணு கழிவுகள் சேகரிப்புக்கு வாராந்திர முகாம், கட்டுமானக் கழிவுகள் சேகரிக்க தனி இடம் ஒதுக்கப்படும். நகர்ப்புற பசுமைமயமாக்கல் திட்டத்தில் 37ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நீர்நிலை, பூங்கா, சாலை மையத்தடுப்பு, மாநக ராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்க ளில் நடுவதற்கு நடவடிக்கை எடுக் கப்படும். வடக்கில் புதிய பெண்கள் பள்ளி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நிகராக வரும் 2026 - 27 கல்வி ஆண்டில் மாநகரின் வடக்குப் பகுதியில் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் வடக்கு மாநகரில் தனி ஆம்னி பேரு்நது நிலையம் அமைக்கப்படும். 50 இடங்களில்புதிய ஸ்மார்ட் பொதுக் கழிப்பறைகள், பெண்க ளுக்கு தனியான பிங்க் கழிப்பறை கள் அமைக்கப்படும். நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க இடைமறிப்பு வடிகால்கள், இரு கரைகளிலும் தடுப்புச் சுவர்கள், கூடுதல் 7 கி.மீட்டர் நீளத்திற்கு புதிய சாலை கள் அமைக்கப்படும். நல்லாற்றி லும் தடுப்புச் சுவர், தார்ச்சாலை அமைக்கப்படும். நொய்யல் ஆற்றின் கரைகளில் 8 கி.மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டிப் பாதை கள் மற்றும் நடைபாதைகள் மேற் கொள்ள கருத்துரு தயாரிக்கப் பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பீட்டில் கால் பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட வுள்ளது. இதுதவிர மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைப்பது, பூங்காக்கள் அமைப்பது, நொய்யல் நதிக்க ரையோரம் உணவு வீதி, நகரும் கழிப்பறைகள் உள்ளிட்ட பல் வேறு வளர்ச்சிப் பணிகள் திட்டமி டப்பட்டுள்ளன. ரூ.46.80 கோடி மதிப்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் புதிய மாநக ராட்சி கட்டிடம் கட்டும் பணி ஓராண்டில் முடிப்பது, கண்ணாடி யிழை வடங்களை நிலத்தடியில் கொண்டு செல்வது, தெருநாய் கள் கட்டுப்பாடு, மாநகர வளர்ச்சிக்கு வித்திட்ட 11 தலை வர்களுக்கு மார்பளவு சிலை அமைத்தல், மாநகர தூய்மை பரா மரிப்பு குறித்து நிட் சிட்டி சின்னம் உருவாக்குவது, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வரி விதிப்பது, வேலைவாய்ப்பு முகாம், திருப் பூர் திருவிழா கொண்டாடுதல் உள்ளிட்ட மொத்தம் 73 வகை யான பணிகள் தீர்மானிக்கப்பட்டி ருப்பதாக நிதி நிலை அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்து வரி வருடம் 6 சதவிகி தம் உயர்வு என்ற அறிவிப்பை நிறுத்தி வைத்து அரசு உத்தர விட்டுள்ளது என்றும் மேயர் கூறி னார்.

பட்ஜெட் உரை ஆரம்பிக்கும் முன் அதிமுக, பாஜக வெளிநடப்பு '

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து உரை வாசிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக, பாஜக வினர் வெளிநடப்பு செய்தனர். இவர்களுக்கு மேயர் தினேஷ்கு மார் பதிலளித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் குழப் பமான சூழ்நிலை நிலவியது. திருப்பூர் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேயர் தினேஷ்குமார் நிதிநிலை அறிக்கை உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது அதிமுக குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி எழுந்து கடந்த ஆண்டு பட்ஜெட் அறிக்கை யின் அட்டைப் படத்தை மாற்றியதை தவிர வேறெதுவும் செய்ய வில்லை என்று கூறினார். பட்ஜெட் உரையை அதற்குள் எந்திரன் போல் வாசித்து விட்டீர்களா? வெளிநடப்பு செய்வது என்ற முடி வோடு வந்து இருக்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதி லளிக்கத் தயார் என்று கூறினார். எனினும் அதை கேட்காமல் அதிமு கவினர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து மேயர், ஐந்தாண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தீர்களா, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், என்று கூறினார். இதையடுத்து அதிமுகவினர் கூச்சலிடத் தொடங்கினர். பாஜக வினரும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். மற்ற கட்சியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்பிய நிலையில், அதிமுகவினரை மேயர் எச்சரித்தார். வெளிந டப்பு செய்வதாக இருந்தால் வெளியே செல்லுங்கள், இல்லா விட்டால் பதில் சொல்வதை கேளுங்கள் என்றார். சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. அதிமுக பாஜகவினர் வெளியேறிய பிறகு கூட்டம் தொடர்ந்தது. நிதி நிலை அறிக்கையை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வரவேற்றுப் பேசினர். அதேசம யம் சொத்து வரி ஆண்டுக்கு 6 சதவிகித உயர்வு என்பதை நிறுத்தி வைத்திருப்பது போதாது, முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். சொத்து வரி இனங்கள் அருகருகே இருக்கும் கட்டிடங்களுக்கு பாரபட்சமாக வரி விதிப்பு செய்யப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.