தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குப்பைகளை கொட்ட பாறைக்குழி தேடும் மாநகராட்சி!

4 Jul 2026, 12:46 am
குப்பைகளை கொட்ட பாறைக்குழி தேடும் மாநகராட்சி!

குப்பைகளை கொட்ட பாறைக்குழி தேடும் மாநகராட்சி!

திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் மாநகராட்சியில் உரு வாகும் குப்பையை கொட்டுவ தற்கு மாநகராட்சி நிர்வாகம் மீண் டும் பாறைக்குழியைத் தேடி வரு கிறது.

திருப்பூர் மாநகரில் குடியிருப்பு களில் நாள்தோறும் 500 டன்னுக்கு மேல் குப்பை உற்பத்தியாகிறது.

கடந்த காலங்களில் பாறைக்குழி யில் கொட்டப்பட்டு வந்தது. விவசா யிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கிராமப்புற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாறைக்குழி களில் குப்பை கொட்டுவது நிறுத்தப் பட்டது. அதேசமயம் குப்பை மேலாண்மை செய்து அகற்றுவ தற்கு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

எனினும் இந்த நடவடிக் கையில் தற்போது தொய்வு ஏற் பட்டுள்ளது.

ஏற்கெனவே கொட்டப் பட்ட குப்பை நிரம்பியதால் பழைய பாறைக்குழிகளில் குப்பை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் நகரில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கி யிருக்கிறது.

இதன்ஒருபகுதியாக, பத்மா வதிபுரம் பகுதியில் இருந்து அங் கேரிபாளையம் சாலை, சிவன் தியேட்டர் சாலை சந்திப்புக்கு சென்று சேரும் வீதியில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

அந்த சாலையில் கார்கள், ஜீப் கள், இருசக்கர வாகனங்கள் மற் றும் நடந்து செல்லும் பாதசாரிகள் செல்ல முடியாத அளவுக்கு வீதி யையே நிறைத்து குப்பை கொட்டப் பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அப்பகுதி மக்கள் குப் பையை அப்புறப்படுத்த வலியுறுத் தியும் மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்காமல் உள்ளது.

மாந ராட்சி நிர்வாகத்தின் இயலா மையை சுட்டிக்காட்டி அப்பகுதி யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ப்ளக்ஸ் போர்டு வைத்து அம்பலப்படுத்தி யுள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக கடந்த திங்களன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திலும் எதிரொ லித்தது.

விரைவில் குப்பை பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என நிர் வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட் டது.

மீண்டும் பாறைக்குழியைத் தான் குப்பை கொட்டத் தேடி வரு கின்றனர். திடக்கழிவு மேலாண்மை பிரச் சனை என்பது திருப்பூர் மட்டுமின்றி அனைத்து பெரு நகரங்களிலும் பெரும் தலைவலியாக உருவெ டுத்துள்ளது.

இதற்காக ஏற்கெ னவே ஒன்றிய அரசு 2016 திடக்கழிவு மேலாண்மை விதிமுறையை வகுத் துள்ளது. அதையும் உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த எந்த முன்முயற்சியும் மேற்கொள்ள வில்லை. தற்போது திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2026 என மேம்படுத்தி வெளியிடப்பட் டுள்ளது.

எனினும் தமிழ்நாட்டில் மாநில அரசும், நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்த விதிமுறைகளை நடை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தாக தெரியவில்லை.

மக்கள் பங் கேற்புடன இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், குப்பை மேலாண் மைக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பழைய முறை யிலேயே குப்பை கொட்ட பாறைக் குழியைத் தேடும் முயற்சியை மாந கராட்சி நிர்வாகம் கைவிட வேண் டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.