தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெருக்களின் சாதி பெயர்களை மாற்ற மாநகராட்சி அலுவலகத்தில் மனு

1 hour before
தெருக்களின் சாதி பெயர்களை மாற்ற மாநகராட்சி அலுவலகத்தில் மனு

தெருக்களின் சாதி பெயர்களை மாற்ற மாநகராட்சி அலுவலகத்தில் மனு

திருப்பூர், அக்.7-தமிழ்நாட்டில் ஊர்கள், தெருக்கள் பெயர்கள் சாதி பெயரில் இருப்பதை, அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவின்அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என திராவிடர்தளம் அமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்.6 ஆம் தேதி சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்றியமைக்க அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது. அதன் இரண்டாமாண்டு தொடக்க நாளான புதனன்று, சாதி ஒழிப்பு ஆணையை நடைமுறைப்படுத்தக்கோரி திருப்பூர் மாநக

ராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையர் தங்கவேல் ராஜனிடம் திராவிடர் தளத்தினர் மனு அளித்தனர். அம்மனுவில், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி எல்லைகளுக்குள் சாதிப்பெயரில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்றுதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக நீதி

மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த செப்.23 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஏற்கெனவே அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், அதை செயல்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, மாநகராட்சி ஆணையர் தங்களது மாநகராட்சி எல்லைக்குள் சாதிப் பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை விரைந்து மாற்றி, சாதி அடையாளங்கள் இல்லாத சமத்துவமான பெயர்களை சூட்ட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை 30க்கும் மேற்பட்ட வீதிகளின் பெயர்கள் சாதிப்பெயர்களாக உள்ளன. இவற்றை மாற்றிட வேண்டும் என வலியுறத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், திராவிடர் தளம் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்குமார், வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.