மாநகராட்சி அலுவலகம் அருகே அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி
21 Jul 2026, 10:45 pm
<p><strong>மாநகராட்சி அலுவலகம் அருகே அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி</strong></p><p>திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் மாநகராட்சி சந்திப் பில் காவல் துறை மேற்கொண் டுள்ள போக்குவரத்து மாற்றத்தால் வாகன நெரிசல் ஓரளவு குறைந்தி ருந்தாலும், மாநகராட்சி நுழைவா யில் அருகே குளறுபடியும் விபத்து அபாயமும் நிலவுகிறது. காமராஜர் சாலை, புது மார்க் கெட் வீதி, மங்கலம் சாலை, பார்க் ரோடு ஆகிய நான்கு முக்கியச் சாலைகள் இணையும் பகுதியாக மாநகராட்சி சந்திப்பு உள்ளது. இங்கு நெரிசலை குறைக்க, காலை மற்றும் மாலை வேளைகளில் சிக் னல் அணைக்கப்பட்டு, பார்க் ரோடு செல்லும் பாதை இரும்புத் தடுப்பு களால் அடைக்கப்படுகிறது.வடக்கே செல்லும் வாகனங்கள் கருவம் பாளையம் வழியாக மாற்றி விடப் படுகின்றன. இந்த ஏற்பாட்டினால் முதன்மை சாலையில் நெரிசல் தணிந்தாலும், காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் மாநகராட்சி அலுவ லகம் அருகே ‘யூ-டர்ன்’ எடுப்பதால் கடும் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் சிக்னல் இல்லாததால் வாகனங்கள் நிற்காமல் தொடர்ச்சியாகச் செல்வ தால், அலுவலகத்திற்கு வரும் பாத சாரிகள் சாலையை கடக்க முடியா மல் திணறுகின்றனர். இதனால் அப் பகுதியில் விபத்து நேரிடும் அச்சு றுத்தல் அதிகரித்துள்ளது. எனவே மாநகராட்சி சந்திப்பில் போக்குவ ரத்து சிக்னலை முறையாக இயக்கு வது மற்றும் போக்குவரத்து காவ லர்கள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடுவதன் மூலம் இங்கு நெருக் கடியை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி வர்த்த கர்கள், வியாபாரிகள் எதிர்பார்க் கின்றனர்.</p>
