தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழவர் சந்தை அருகே படுகுழி கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி

17 Jul 2026, 11:31 pm
உழவர் சந்தை அருகே படுகுழி கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி
<p><strong>உழவர் சந்தை அருகே படுகுழி கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி</strong></p><p>திருப்பூர், ஜூலை 17- திருப்பூர் தெற்கு உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தை அமைந்துள்ள தென் னம்பாளையம் பகுதியில், ஏபிடி சாலைக்குச் செல் லும் பாதையின் நடுவே ஆபத்தான படுகுழி ஏற் பட்டுள்ளதால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லடம் சாலையிலிருந்து மங்களம் சாலையை இணைக்கும் முக்கிய வழித்தட மாக உள்ள இந்த சாலை ஆங்காங்கே பெரும் பள்ளங்களாக உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயி கள், வியாபாரிகள் மற்றும் நூற்றுக்கணக் கான சரக்கு வாகனங்கள் இப்பாதையில் செல்கின்றனர். தற்போது ஜம்மனை பாலம் சந்திப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள பெரிய குழி காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடையும் விபத்துகள் தினசரி தொடர்கதையாகி உள் ளன. குறிப்பாக, அதிகாலை நேரத்தில் வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இருட் டில் இக்குழியை அறியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். பல நாட்களாக நீடிக்கும் இந்த அவல நிலை குறித்து மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. எனவே, மேலும் பெரிய விபத்து கள் ஏற்படும் முன், மாநகராட்சி நிர்வாகம் உட னடியாக தலையிட்டு இப்படுகுழியை மூடி, சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.