தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர், பாதாள சாக்கடை, குப்பை அகற்றம் ஆகிய மூன்று பணிகளிலும் திருப்பூர் மாநகராட்சி முழுத் தோல்வி

2 Jul 2026, 2:06 am
குடிநீர், பாதாள சாக்கடை, குப்பை அகற்றம் ஆகிய மூன்று பணிகளிலும் திருப்பூர் மாநகராட்சி முழுத் தோல்வி

குடிநீர், பாதாள சாக்கடை, குப்பை அகற்றம் ஆகிய மூன்று பணிகளிலும் திருப்பூர் மாநகராட்சி முழுத் தோல்வி

​​​​​​​திருப்பூர், ஜூலை 1- திருப்பூர் மாநகராட்சியில் குடி நீர் விநியோகம், பாதாள சாக் கடை, குப்பை அகற்றம் ஆகிய மூன்று பணிகளிலும் நிர்வாகம் முழுத் தோல்வி அடைந்து விட்டது என்று மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், துணை மேயர் (பொறுப்பு மேயர்) ஆர். பாலசுப்பிர மணியம் தலைமையில் அண்மை யில் நடைபெற்றது.

இதில் மாநக ராட்சி ஆணையர் எம்.பி.அமித் மற் றும் அதிகாரிகள், மாமன்ற உறுப் பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கும் முன்பாக, திமுக உறுப்பினர் திவாகரன், முன் னாள் முதல்வர் ஸ்டாலினின் படத்தை மன்ற அரங்கில் பொருத்தி னார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பி னர்கள், காமராஜர் உள்ளிட்ட அனைத்து முன்னாள் முதல்வர்க ளின் படங்களையும் வைக்க வேண் டும் என வலியுறுத்தினர்.

இதற் கிடையே, தவெக-விற்கு மாறிய மாமன்ற உறுப்பினர் சு.குமார், புதிய முதல்வர் விஜய்க்கு வாழ்த்துத் தீர்மானம் மொழிந்தார்.

தொடர்ந்து, பாஜக உறுப்பினர் மோடியின் படத்தையும், அதிமுக வினர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும் மன்றத்தில் வைக்கக் கோரி மேடையேறி முழக்கமிட்ட தால் பெரும் சலசலப்பு நிலவியது.

தீர்மானம் நிறைவேற்றிய பின்பே படங்கள் மாட்டப்பட வேண்டும் என பொறுப்பு மேயர் சமாதானம் செய்தார்.

மாநகராட்சியின் குடிநீர் விநியோ கம், பாதாள சாக்கடை மற்றும் குப்பை அகற்றம் ஆகிய மூன்று பிரதான பணிகளிலும் நிர்வாகம் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

மேலும், நகரில் தேங் கும் குப்பை பிரச்சனைக்கு போர்க் கால அடிப்படையில் தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என சிபிஐ உறுப்பினர் செல்வராஜ் கோரினார்.

சொத்துவரி உயர்வை உடனடி யாக குறைக்க வேண்டும் என அதி முக குழுத் தலைவர் அன்பகம் திருப் பதி வலியுறுத்தினார்.

மேலும், 2025- இல் முடிவெடுக்கப்பட்ட குடிநீர் மற் றும் பாதாள சாக்கடை சேவை கட் டண உயர்வு தீர்மானங்களை ஒத்தி வைக்காமல், முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மணி மேகலை மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செந்தில்குமார் ஆகி யோர் கடுமையாக வலியுறுத்தினர்.

இத்தீர்மானங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பொறுப்பு மேயர் அறிவித்தார்.

கூட்டத்தை முறைப்படி நடத்தா மல், பெண் உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு பேச உரிய வாய்ப்பளிக்காததால், சிபிஎம் உறுப்பினர் மணிமேகலை மேடையின் முன்னே நின்று பொறுப்பு மேயரிடம் அழுத்தமாக வலியுறுத்தினார்.

இதனால் மாமன்ற வளாகம் சில மணி நேரம் பரபரப்பாகக் காட்சியளித்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.