தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

19 May 2026, 11:45 pm
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை  குறைக்காமல் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், மே 19- திருப்பூர் மாநகராட்சியில் ஒப் பந்த அடிப்படையில் வேலை செய் யும் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல் வழங்க திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள் ளிட்ட ஊழியர்கள் மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித்திடம் திங் களன்று அளித்த மனுவில், திருப்பூர் மாநகரின் நான்கு மண்டலங்களி லும் ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலை செய்யும் தூய்மைப் பணி யாளர், ஓட்டுநர், குடிநீர் மற்றும் டிபிசி ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக, குறித்த தேதிகளில் வழங்கப்படாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வேலை நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டபடி சம்பள ரசீது வழங்கப்படுவதில்லை.

ஊதியத்தை குறைத்து வழங்குவதுடன், பேருந்து கட்டணம், புலம் பெயர் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு வாடகை என கூடுதல் தொகையை பிடித்தம் செய்கின்றனர்.

இவர்க ளது குடியிருப்பு மிக அவலமான நிலையில் உள்ளது.

ஒப்பந்தப் பணி யாளர்களுக்கு சிஐடியு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட படி மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

ஆனால் குடிநீர் பணி யாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் குறைத்து வழங்கப்படுகிறது. டிபிசி ஊழியர்களுக்கு இம்மாவட் டத்திலேயே குறைவாக தினசரி ரூ.355 ஊதியம் மட்டுமே வழங்கப் படுகிறது.

எனவே, டிபிசி ஊழியர்களுக்கு ரூ.838 தினசரி ஊதியம், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.761 தினசரி ஊதியம், குடிநீர் பணி மற்றும் ஓட்டு நர்களுக்கு ரூ.799 தினசரி ஊதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதுடன், பேருந்து கட்டணம், குடியிருப்பு வாடகை என பிடித்தம் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அவுட்சோர் சிங் ஒப்பந்த முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என தெரிவித் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.