அலட்சியமாக பதிலளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
25 May 2026, 11:18 pm

அலட்சியமாக பதிலளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்பூர், மே 25- முதல்வரின் தனிப்பிரிவு மனு வுக்கு அலட்சிய பதிலளித்த திருப் பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத் துள்ளன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லூர் நுகர் வோர் நல மன்றத்தின் சண்முக சுந் தரம், திருப்பூர் நுகர்வோர் நல முன் னேற்ற சங்க தலைவர் சரவணன், ரவி, ஈஸ்வரன், துறை பத்து ரூபாய் இயக்கம் செல்வம் உள்ளிட்டோர் திங்களன்று மனு ஒன்றை அளித்த னர்.

அதில், திருப்பூர் மாநகராட்சிக் குட்பட்ட பெருமாள் கோவில் பூ மார்கெட், பெருமாள் கோவில் வீதி மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தற்காலிக கடை கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்துள்ளன.

இதனால் அப்பகுதி யில் அன்றாடம் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொது மக்களுக்கு மிகுந்த இடையூறும் ஏற்பட்டு வருகிறது.

மேலும், அங் குள்ள உணவு அங்காடிகளில் இருந்து கொட்டப்படும் கழிவுக ளால் அப்பகுதி முழுவதும் சுகா தாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் அனுப் பப்பட்டன.

ஆனால், இந்த மனுக் களை முழுமையாக படித்துப் பார்க் காமலும், கள நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்யாமலும் திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 -இன் உதவி ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் முற்றிலும் பொய்யான மற்றும் தவறான தகவல்களை பதில்களாக அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயல் முதல்வரின் தனிப்பிரி வையும், மனுதாரரான பொது மக்களையும் நேரடியாக ஏமாற் றும் வகையில் அமைந்துள்ளது.

மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப் பப்படும் பல மனுக்களுக்கு “நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது” என்ற மழுப்பலான பதில் களோ அல்லது “இது எங்கள் துறைக்கு உட்பட்டது அல்ல” என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பதில்களோ மட்டுமே வருவதாக தெரிவித்தனர்.

அதிகாரிகளின் இத் தகைய பொறுப்பற்ற பதில்கள் மனு தாரர்களுக்கு பெரும் மன உளைச் சலையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க நுகர் வோர் அமைப்பு வலியுறுத்தியுள் ளது.

தவறான மற்றும் பொறுப்பற்ற தகவல்களை வழங்கிய திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3-ன் உதவி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக கடுமையான துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பெருமாள் கோவில் பூ மார்கெட் மற் றும் அதன் சுற்றுவட்டார வீதிக ளில் உள்ள சாலை மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை போர் கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.