திருப்பூரில் ஜூலை 10 - 13 கான்ஸ்ட்ரோ மெகா கட்டுமான பொருட்கள் கண்காட்சி
6 Jul 2026, 10:11 pm
<p><strong>திருப்பூரில் ஜூலை 10 - 13 கான்ஸ்ட்ரோ மெகா கட்டுமான பொருட்கள் கண்காட்சி</strong></p><p>திருப்பூர், ஜூலை 6 - திருப்பூரில் வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நான்கு நாட்க ளுக்கு, 21-வது ’கான்ஸ்ட்ரோ’ மெகா கட்டு மானப் பொருட்கள் கண் காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோ சியேஷன் (TCEA) அலுவல கத்தில், கண்காட்சித் தலைவர் என்.ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் இக்கண்காட்சி நடை பெறுகிறது. இதன் துவக்க விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் வி.ஜனார்த்தனன் தலைமை தாங்குகிறார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பாலமுருகன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சத்தியபாமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங் கேற்கின்றனர். இக்கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டு மானப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங் கள் பங்கேற்கின்றன. குறிப்பாக, கட்டு மான செலவை குறைக்கும் நவீன பொருட் கள், பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கற் கள், கம்பிகள், சிமெண்ட், ரெடிமேட் கான் கிரீட், பேவர் பிளாக், சோலார் உபகரணங் கள், லாக்கர், நவீன கண்ணாடி மற்றும் பெயிண்ட் வகைகள், புதிய பாத் ஃபிட்டிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு புதுமையான பொருட் கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி முற்றி லும் இலவசம். மேலும், கண்காட்சி வளாகத் தில் இலவச கண், காது, பல், தோல், பொது மருத்துவம் மற்றும் ரத்தப் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகின்றன. பங்கேற் கும் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளு டன் பொருட்களை வழங்கத் தயாராக உள்ள தால், தற்போது வீடு கட்டுபவர்களும், எதிர் காலத் திட்டமிடுதலில் உள்ளவர்களும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள லாம் என்றார். இச்செய்தியாளர் சந்திப்பில், அசோசி யேஷன் செயலாளர் டி.மோகன்ராஜ், கண் காட்சி செயலாளர் எஸ்.நாகராஜ், பொருளா ளர் பி.டி.சம்பத், துணைத் தலைவர் ஆர்.பிர காஷ் மற்றும் முன்னாள் தலைவர் குமார் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனி ருந்தனர்.</p>
