குடிநீர் பற்றாக்குறை, சாதியப் பாகுபாடு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் போராட்டம்!
1 Jun 2026, 11:39 pm

குடிநீர் பற்றாக்குறை, சாதியப் பாகுபாடு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் போராட்டம்!

திருப்பூர், ஜூன் 1- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்ற குறைதீர்க்கும் நாள் முகா மில், குடிநீர் பற்றாக்குறை மற்றும் சாதியப் பாகுபாடுகளை கண்டித் துப் பல்வேறு கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

தாராபுரம் வட்டம், சூரியநல் லூர் ஊராட்சியை சேர்ந்த பட்டிய லின மக்கள் அளித்த மனுவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கிடைத்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாக எங்கள் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பிற தெருக்களுக்கு தடையின்றித் தண்ணீர் வழங்கப்படும் நிலை யில், எங்களுக்கு மட்டும் மறுக்கப் படுவது சாதியப் பாகுபாடே ஆகும்.

அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

சேத மடைந்த குழாய்களை சீரமைத்து, சீரான குடிநீர் வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டியன்கோவில் ஊராட்சி, மருதுரை வலசு கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்து தராததால் குடிநீர் பிரச் சனை உள்ளது.

ஐந்து முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப் படைக்க திரண்டு வந்தனர்.

தங் கள் பகுதியில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாத தால் நிலத்தடி நீரைக் குடிக்கும் அவல நிலை உள்ளதாகவும், முறை யான தெருவிளக்கு, கழிப்பிட வசதி கள் இல்லை என்றும் அவர்கள் குற் றம் சாட்டினர்.

11 குக்கிராமங்கள் தவிப்பு காங்கேயம் அருகிலுள்ள பால சமுத்திரம் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த வயக்காட்டு புதூர், தொட்டி பாளையம் உள்ளிட்ட 11 குக்கிரா மங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் வசதியின்றி தவிக்கின்றனர். நாளொன்றுக்கு 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப் படுகிறது.

நொய்யல் ஆற்று மாசு பாட்டால் நிலத்தடி நீரும் பாழாகி யுள்ளதால், தற்போதைய தவெக ஆட்சியில் தங்களின் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் எனப் பெண்கள் மனு அளித்தனர்.

இதேபோல், அவிநாசிபாளையம் ஊராட்சி எம்.ஜி லே அவுட் பகுதி மக்களும் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவ தால் வேலைக்குச் செல்பவர்கள் அவதிப்படுவதாக முறையிட்டனர்.

தனியார் பள்ளிகள் கட்டண மோசடி பள்ளிக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை தனியார் பள்ளிகள் மதிக்க வில்லை எனப் பல்லடம் சமூக ஆர் வலர்கள் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

மேலும், வங்கி கணக்கு மூலம் பணத்தைப் பெறா மல், ரொக்கமாக பெற்றுக் கொண்டு ரசீது தராமல் தனியார் பள்ளிகள் மோசடி செய்வதாக கூறி, அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தினர்.

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல் தெக்கலூர், காமநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள டாஸ் மாக் கடையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும், இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளதாகவும் கூறி, பெண்கள் மற் றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அந்த டாஸ்மாக் கடையை உடனடி யாக மூடக்கோரி நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் மனு அளித்த னர்.