அடிப்படை வசதிகள் கேட்டு திருப்பூர் ஆட்சியரகத்தில் குவிந்த மனுக்கள்
11 Aug 2026, 11:12 pm

அடிப்படை வசதிகள் கேட்டு திருப்பூர் ஆட்சியரகத்தில் குவிந்த மனுக்கள்

திருப்பூர், ஆக.11– திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதி, நிலத் தகராறு மற்றும் பேருந்து வசதி கோரி பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர்.

வீரபாண்டி வஞ்சி நகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால், கழிவுநீர் வீடுகளுக்குள்புகுவதுடன், மனிதக்கழிவுகள் கால்வாய்களில் தேங்கி கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு குடிநீர் தொட்டிகள்மட்டுமே உள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய அதிகாரி இளங்கோவிடம் முறையிட்டும் அலட்சியம் காட்டுவதாகக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர்.

இதேபோன்று, சந்திராபுரம் பாரதி நகரை சேர்ந்த சந்திரகலா என்பவர், தனது நிலத்தைநில அளவையர் தவறாக அளவீடு செய்து அபகரிக்க முயல்வதாகக் கூறி, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிதீக்குளிக்க முயன்றார். பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில், மனைகள் (எண் 41, 42) தொடர்பாக பக்கத்து நிலஉரிமையாளர்களுடன் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஏற்பட்ட மன உளைச்சலில் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் அளித்துள்ள மனுவில், கடந்த 3 ஆண்டுகளாக பைக் டாக்ஸியையே முழுநேரத் தொழிலாக நம்பியுள்ளோம். தற்போது அரசு அனுமதி மறுத்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விதிக்கும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக உள்ளதால், கொள்கை முடிவுஎடுத்து அனுமதிவழங்க வேண்டும் என் கேட்டுக்கொண்டனர். இதேபோன்று, சுண்டமேடு அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், தங்கள் பகுதி மாணவர்கள் இடுவம்பாளையம் அரசுப் பள்ளி மற்றும் திருப்பூர் நகர்புற பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லாததால், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுஅளித்தனர்.