தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலைவாழ் மக்கள் விவசாயம் செய்ய பயிர் கடன்

17 Jul 2026, 11:25 pm
மலைவாழ் மக்கள் விவசாயம் செய்ய பயிர் கடன்

மலைவாழ் மக்கள் விவசாயம் செய்ய பயிர் கடன்

திருப்பூர், ஜூலை 17 - மலைவாழ் மக்கள் விவசாயம் செய்வதற்கு பயிர் கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வைத்த கோரிக் கையை ஏற்று பயிர் கடன் வழங்கு வதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட் டம் ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது.

இதில், கடந்த முறை நடை பெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் உறுதியளித்தபடி சங்கப் பிர திநிதிகள் குறை தெரிவிப்பதற்கு தனி கூட்டமாக நடத்தப்பட்டது. முன்னதாக, உடுமலை ஜம்புக் கல் மலை ஆக்கிரமிப்பு குறித்து விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டும் நிலையில், அங்கு நில அளவை செய்து சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும்.

இதற்கென குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயத்து சிறப்பு பணி என தீர்மானித்து நடவ டிக்கை எடுக்கும்படி அதிகாரிக ளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் எம்.எம். வீரப்பன் பேசுகையில், நீர் நிர்வா கம் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

அமராவதி ஆற்றில் முறைகேடாக குழாய் பதிக்கப்பட்டுள்ளவற்றை ஆட்சியர் ஆய்வு செய்ததை விவ சாயிகள் அனைவரும் வரவேற் கின்றனர். ஆட்சியரின் ஆய்வுப்படி, அந்த சட்டவிரோத குழாய்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சம் இன்றி அனைவருக்கும் நீர் வழங்க வேண் டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்

. 21 ஆம் தேதி தண் ணீர் திறப்பது மகிழ்ச்சி என்றார். விவசாயி மௌன குருசாமி பேசுகையில், கேத்தனூர் பகுதியில் கைலி கட்டிக்கொண்டு வாகனங்க ளில் சுமைகளை எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் கேவலமாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்றார். விவசாயி வேலுச்சாமி பேசுகை யில், பிஏபி திட்டத்தில் காங்கேயம் பகுதியில் ஆட்சியர் கள ஆய்வு செய்ய வேண்டும். தெரு நாய் களால் கால்நடைகள் இழப்பது தொடர்கிறது.

அதற்கு சந்தை மதிப் பில் இழப்பீடு வழங்க உடனே நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏற் கனவே நிலுவையில் உள்ள இழப் பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் எஸ்.பரமசிவம் பேசும்போது, தேங் காய் விலை சரிவை சந்தித்து தற் போது தான் ஓரளவு விடை கூடி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஈரோடு திருப்பூர் கோவை உள் ளிட்ட பகுதிகளில் தென்னை மட்டையை கொள்முதல் செய்வது நிறுத்தப் போவதாக ஒரு தனி அமைப்பு தன்னிச்சையாக அறி வித்திருப்பது சரியல்ல. இது பிரச்சனையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொறுப்பற்ற பதில் சமூக விரோதிகள் தோட்ட வீடுகளில் குடியிருக்கும் விவசாயிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற சம்ப வம் அதிர்ச்சி அளிக்கிறது. இதை தடுக்க காவல்துறை ரோந்து செல்ல வேண்டும் என்றார்.

ஆனால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை அதிகாரி, விவசாயிகளுக்கு பாதுகாப்பு தருவதற்கு உறுதிய ளிக்க வேண்டிய நிலையில், விவ சாயிகள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். பத்தாயிரம் ரூபாய் செல்போன் வாங்குகிறார் கள் சிசிடிவி கேமரா பொருத்தக் கூடாதா என்று கேட்டது விவசாயி களை எரிச்சல் அடையச் செய்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ் ஆர் மது சூதனன் பேசும்போது, ஏற்கனவே ஏழு மனுக்கள் கொடுத்தும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. பிஏபி நீர்வழிப் பாதையில் பைபாஸ் அமைப்பதை தடுக்க எடுத்த நட வடிக்கை? இனாம் நில பிரச் சனைக்கு திருப்பூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட டிஆர்ஓ செயல் பாடு என்ன? இந்து சமய அற நிலையத் துறையினர், வாழவாடி வரதராஜ பெருமாள் கோவில் நிலம் ஆறு மாதங்கள் ஆகியும் ஏலத்துக்கு கொண்டு வராமல் இருப்பது ஏன்?. மலைவாழ் மக்கள் பட்டா பெற்று அதில் காபி ஏலம் ஆரஞ்சு ஆகியவற்றை பயிரிடு கின்றனர்.

அவர்களுக்கு பயிர் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண் டும். உரம், பூச்சி மருந்து விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சை யாக உயர்த்துகின்றன. எம்ஆர்பி விலையை விட அதிகமாக விற்கின் றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுசூ தனன் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.