தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோரிக்கை அமராவதி கால்வாய்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு!
16 Jul 2026, 10:08 pm
<p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோரிக்கை அமராவதி கால்வாய்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு!</strong></p><p>உடுமலை, ஜூலை 16 – அமராவதி அணை பிரதான வாய்க்கால் ஷட்டர் பராமரிப் பில் முறைகேடு, சட்ட விரோத நீர் திருட்டு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அளித்த புகாரை தொடர்ந்து வியாழ னன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே நேரில் ஆய்வு மேற்கொண்டார். அமராவதி அணை பிரதான வாய்க்கால் ஷட்டர் பராமரிப் பில் முறைகேடு, சட்டவிரோத நீர் திருட்டு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப்பன் கடந்த மாத குறைதீர் கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அதில், ஷட்டர் பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி நிதி கொண்டு தரம் குறைவான பணிகள் மேற் கொள்ளப்பட்டது குறித்தும், கடத்தூர் வாய்க்கால் மூலம் தொழிற்சாலைகளுக்கு நடக்கும் நீர் திருட்டை தடுக்கவும், ஜூலையில் பாசனத்திற்கு உயிர் தண்ணீர் வழங்கவும் வலி யுறுத்தப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அமராவதி அணை பாசனக் கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதி களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நீர் வளத்துறை அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் விபரங் களைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட் டார். ஆய்வின் போது உடுமலை கோட்டாட்சியர் குமார், வட் டாட்சியர் ரம்யா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சுப்பிர மணியன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் எம்.எம்.வீரப்பன், ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.</p>
