தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் பள்ளிகளுக்கு ஒப்புக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

8 Jul 2026, 10:26 pm
தனியார் பள்ளிகளுக்கு ஒப்புக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
<p><strong>தனியார் பள்ளிகளுக்கு ஒப்புக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்</strong></p><p>திருப்பூர், ஜூலை 8 – தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு பரிந்துரைத்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தனியார் பள்ளி முதல்வர்களிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். எனினும், இது ‘ஒப்புக்கு’ சொல்லப்பட்ட அறிவுரையாகவே கூட்டத்தில் பங்கேற்றவர்களால் உணரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிப்பது, போக்சோ மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவது, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்த ஒரு வாரத் திற்குள் நிபந்தனையின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பை மேம் படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை ஆட்சி யர் வழங்கினார். ஆனால், கட்டண நிர்ணயக் குழுவின் விப ரங்கள் பெற்றோர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை என்றும், ரசீது தராத பள்ளிகளிலேயே அதிகப் பிரச்சினைகள் ஏற்படு வதாகவும் கல்வித் தரப்பினர் கூறுகின்றனர். மேலும், பெரும்பாலான முன்னணி தனியார் பள்ளி கள் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் கெடுபிடி செய்வதோடு, மதிப்பெண்ணுக்கு மட்டுமே முக்கி யத்துவம் கொடுத்து விளையாட்டு உள்ளிட்ட இதர செயல்பாடுகளை புறக்கணிப்பதாகவும், இத னால் ஆட்சியரின் அறிவுரைகளை பள்ளி நிர் வாகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சில பள்ளி முதல் வர்கள் வெளிப்படையாக விமர்சித்துச்சென்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆ.புனிதா அந்தோணியம்மாள், மாவட்டக் கல்வி அலுவலர் மா.மணிமாறன், உதவி ஆணையர் பாலமுருகன், போதைப்பொருள் தடுப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கால்சிங் மற் றும் பள்ளி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.