தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

18 Jul 2026, 10:21 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

செங்கப்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் பலி

திருப்பூர், ஜூலை 18- திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சனியன்று அதிகாலை நின்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது, திருத்தணி யில் இருந்து ஊட்டி நோக்கிச் சென்ற ஈக்கோ கார் பயங்கர மாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜய் (30), இவரது மனைவி தேன்மொழி (26) மற்றும் குமார் (36) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்து ஊத்துக்குளி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் கள் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இக்கோர விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர் சங்க பேரவை

சேலம், ஜூலை 18– தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சேலம் நகர வட்ட கிளை பேரவைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் நகர வட்ட கிளை பேரவைக் கூட்டம் சனியன்று அஸ்தம்பட்டி வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அர்த்தனாரி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்டப் பொருளாளர் இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாநிலத் துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து தலைவராக வெங்கடே சன், செயலாளராக ஶ்ரீபதி, பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நள்ளிரவு வரை நீடித்த சோதனை

உதகை, ஜூலை 18- நீலகிரி மாவட்டம், உதகை வட்டாட்சியர் அலுவலகத் தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப் பாளர் ஜாய் தயாள், ஆய்வா ளர் சண்முகவடிவு ஆகி யோர் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட னர். மாலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்த நிலையில் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதிகாரி கள் சிலரின் வங்கி கணக்கு கள் மற்றும் கூகுள் பே எண் களை சோதனை செய்த போது, கணக்கில் வராத பல் வேறு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றது தெரியவந் துள்ளது. குறிப்பாக, மண் டல துணை தாசில்தார் அருண் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜ லட்சுமி ஆகியோர் கணக்கு களில் லட்சக்கணக்கில் பணம் உள்ளது. இதுகுறித்த கணக் குகளை ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.